வேலைவாய்ப்பற்றோர் உதவி தொகை திட்டம் 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுகோள்

Doxycycline No Prescription justify;”>வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் தகுதியானவர்கள் வரும் 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். படித்துவிட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்து ஆண்டுகள் காத்திருக்கும் மனுதாரர்கள் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவி தொகை பெறுவதற்கு தகுதி உடையவர் ஆவர். இத்திட்டத்தின் கீழ் பயன் பெற உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர் 45 வயதும், இதர வகுப்பினர் 40 வயதும் பூர்த்தி அடைந்திருக்க கூடாது. இத்திட்டத்தின் கீழ் பயன் பெற குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு 50 ஆயிரம் ரூபாய் ஆகும். 9ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பின்னர் 10ம் வகுப்பு இறுதி தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெறாதவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் முழுமையாக பூர்த்தியாகி இருந்தால் விண்ணப்பிக்க தகுதி உடையவர் ஆவர். மாற்றுத் திறனாளிகள் தங்கள் கல்வித் தகுதியை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஒரு ஆண்டு பூர்த்தியாகி இருக்க வேண்டும். தகுதி உடைய மனுதாரர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு அசல் கல்வி சான்றுகள், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை ஆகியவற்றுடன் உடனடியாக நேரில் வந்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவி தொகை விண்ணப்பத்தை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். இதர இடங்களில் பெறப்றபட்ட விண்ணப்ப படிவங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், பாங்க் கணக்கு புத்தகம், அசல் கல்வி சான்றுகள், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, ஆர்.ஐயிடம் பெறப்பட்ட வருவாய்த் துறை சான்று ஆகியவற்றுடன் வரும் 28ம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து சமர்ப்பிக்க வேண்டும் என்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுஜய சேகரன் நாயர் தெரிவித்தார்.

Add Comment