கப்ஸா!

தேவையான பொருட்கள் :

முழு கோழி – இரண்டு,
பாஸ்மதி அரிசி – அரை கிலோ ( அல்லது தேவைக்கேற்ப) ,
வெங்காயம் – மூன்று
தக்காளி – மூன்று,
எண்ணெய் – தேவைக்கேற்ப,
இஞ்சி பூண்டு விழுது – ஒன்றரை தேக்கரண்டி,
பட்டர் – ஒரு தேக்கரண்டி,
மாகி சிக்கன் க்யூப்-  சிறிதளவு,
உலர்ந்த மிளகாய்-  5,
உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை :

*முழு கோழியைச் (தோலுடன்) சுத்தம் செய்யவும்.

*அரிசியை இருபது நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

*வாணலியைக் காயவைத்து அதில் எண்ணெய் மற்றும் பட்டர் இவற்றை ஊற்றி,உலர்ந்த மிளகாய் போட்டு மணம் வந்ததும் தக்காளி, வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.

*இஞ்சி buy Cialis online பூண்டு விழுதைப் போட்டு  வதக்கவும். பிறகு மாகி சிக்கன் க்யூப் போடவும்.

* அரிசி ஒன்றுக்கு ஒன்றரை பங்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து  சுத்தம் செய்த கோழியை அப்படியே போட்டு முக்கால் பங்கு வேகவிடவும்.

*கொதிவந்ததும் அரிசியைக் கொட்டி உப்பும் சேர்த்து கொதிக்கவிட்டு வெந்து வைத்துள்ள கோழியைத் தனியாக எடுத்து கொஞ்சம் நெய்(அல்லது எண்ணெய்)தடவி, கொஞ்சம் மிளகு பொடி தூவி ஓவன் க்ரில்லில் வைத்து சூடாக்கவும்  (பார்பிக்யூ போல செய்ய வேன்டும்).

சோற்றைத் தீ குறைத்து 20 நிமிடம் தம்மில் வைக்க வேண்டும்.  இளஞ்சூடாகப் சாப்பிட சுவையான அரேபிய உணவு கப்ஸா தயார்.

Add Comment