கூகுள் வேலை… குவிந்தன விண்ணப்பங்கள்!!

புதிதாக வேலைக்கு ஆளெடுப்பதாக கூகுள் நிறுவனம் அறிவித்ததைத் தொடர்ந்து ஒரே வாரத்தில் 75000 விண்ணப்பங்கள் குவிந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் 6000 புதிய பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டது கூகுள். இத்தனை ஆண்டுகளில் கூகுளின் மெகா வேலைவாய்ப்பு அறிவிப்பு இதுதான்.

இந்த அறிவிப்பு வெளியான வேகத்தில் விண்ணப்பங்கள் குவிய ஆரம்பித்துவிட்டன கூகுளுக்கு. 2007-ம் ஆண்டு முதல் முதலாக வேலைவாய்ப்பு அறிவிப்பை கூகுள் ஆரம்பித்ததிலிருந்து, அந்நிறுவனம் பெற்றுள்ள அதிகபட்ச விண்ணப்பங்கள் எண்ணிக்கை இதுதான்.

Buy Amoxil justify;”>1 பணியிடத்துக்கு 12 நபர்கள் வீதம் இப்போது விண்ணப்பித்துள்ளனர்.

முதல் முதலில் கூகுள் நிறுவனம் நியூயார்க் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட போது 3000 பணியாளர்கள் மட்டுமே இருந்தனர். இன்று பொருளாதார மந்தம், பணவீக்கம் என பல பிரச்சினைகளால் சில ஆயிரம் பணியாளர்கள் நீக்கப்பட்டுள்ள நிலையிலும் உலகம் முழுக்க 24400 பேர் இந்நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர். உலகம் முழுக்க மொத்தம் 63 கிளைகள் கூகுளுக்கு உள்ளன.

சாப்ட்வேர் எஞ்ஜினீயர்கள், டிஸைனர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், சாப்ட்வேர் டெவலப்பர்கள், நிர்வாகப் பணியாளர்கள், உள்ளடக்கம் வழங்குநர்கள் என பல பதவிகளுக்கு ஆட்கள் தேவை என விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

Add Comment