கணவர் துன்புறுத்திய பின் பேஸ்புக்கில் அவசர உதவி கேட்ட பரிதாபம்!

img1140103039_1_1

கணவரால் கொடூரமாக தாக்கப்பட்ட பெண் வேறு எந்த வழியும் இல்லாததால் பேஸ்புக்கில் உதவி நாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கென்டகியை சேர்ந்த சுசன்னா என்னும் அந்த பெண்ணை அவரது கணவர் துப்பாக்கியால் கொடூரமாக தாக்கியுள்ளார்.

மேலும், அவரது மனைவி யாரிடமும் உதவி கேட்க கூடாது என்பதற்காக வீட்டில் இருந்த தொலைபேசியையும் உடைத்து விட்டார், இதனால் வேறு வழியில்லாமல் அந்தப் பெண் பேஸ்புக் வாயிலாக உதவி வேண்டினார்.

பேஸ்புக்கில் தனது பரிதாப நிலையை விளக்கும் அவருடைய புகைப்படத்தையும் சேர்த்து அதனுடன் ‘தயவு செய்து யாராவது உதவுங்கள்’ என பதிவேற்றம் செய்தார்.

பேஸ்புக்கில் அந்த புகைப்படத்தை பார்த்த அவரது நண்பர் ஒருவர் லெஸ்லீ பகுதி போலீசுக்கு தகவல் கொடுத்தார். உடனே போலீசார் விரைந்து சென்று அவரை மீட்டனர்.

கணவன் போனை உடைத்ததால் உதவிக்கு யாரை அழைப்பது என்ன செய்வது என்றே எனக்குப் புரியவில்லை, அதிர்ஷ்டவசமாக இணைய வசதி இருந்ததால் Viagra online பேஸ்புக்கில் உதவி கேட்டேன் என்று போலீசிடம் அந்தப் பெண் கூறினார்.

பின்னர் லெஸ்லீ பகுதி போலீசார் WKYT என்ற டிவி சேனலுக்கு அளித்தப் பேட்டியில் கூறியதாவது: அந்த பெண்ணிற்கு தலையில் பல காயங்கள் இருந்தன அவை பார்ப்பதற்கு மிகக் கொடூரமாக தென்பட்டன அவைகள் அவருடைய முடியாலும், இரத்தத்தாலும் மறைக்கப்பட்டிருந்தன என்றார்.

மேலும் அவர் கூறும் போது அந்தப் பெண்ணிற்கும் அவரது கணவர் டோனி ஸ்டாசிக்கும் இடையே ஏற்பட்டத் தகராறில் டோனி ஸ்டாசி அவரை துப்பாக்கியால் பலமுறை தாக்கி இருக்கிறார். பின்னர் போலீசார் அந்த துப்பாக்கியை அவர்கள் வீட்டு பின்புறத்தில் கண்டு பிடித்தனர்.

தற்போது டோனி ஸ்டாசி மனைவியை தாக்கிய குற்றத்திற்காக லெஸ்லி கவுன்டி காவல் நிலையத்தில் விசாரிக்கப் பட்டு வருகிறார்.

Add Comment