முபாரக் விலகும் வரை போராட்டம் தொடரும்: இளம் கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு

30 ஆண்டுகளாக அதிபராக இருந்துவரும் ஹோஸ்னி முபாரக் பதவியில் இருந்து இறங்கும் வரை தங்களது போராட்டம் ஓயாது என்று ஷாடி அல்-கஜலி ஹார்ப் எனும் கிளர்ச்சியை முன்னெடுக்கும் எகிப்து இளைஞர் அமைப்பு அறிவித்துள்ளது.

எகிப்தில் நடைபெற்றுவரும் அரசுக்கு எதிராக கிளர்ச்சியை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியாக துணை முதல்வர் உமர் சுலைமானும், இதர எதிர்க்கட்சிகளும் பேசி வருகின்றன. Viagra No Prescription இதனால் கிளர்ச்சியை கைவிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று எகிப்து அதிபருக்கு எதிரான கிளர்ச்சியை முன்னெடுத்த இளைஞர் இயக்கம் திட்டவட்டமான அறிவித்துள்ளது.

எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக் பதவி விலக வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஜனவரி 25ஆம் தேதி மக்களின் ‘கோப நாள்’ என்று அறிவித்து கிளர்ச்சியை தொடங்கியது ஷாடி அல்-கஜலி ஹார்ப் என்ற இயக்கம். அவர்கள் இன்னும் எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள தாஹிரிர் சதுக்கத்தில் இருந்து வெளியேறவில்லை.

“எகிப்து அரசமைப்பில் முழுமையான புரட்சிகர மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்பதும், அதில் முதன்மையாக அதிபர் முபாரக் ஆட்சியில் இருந்து இறங்க வேண்டும் என்பதும்தான் எங்களின் கோரிக்கை” என்று கூறியுள்ள அந்த அமைப்பு, அது நிறைவேறும் வரை தாஹிரிர் சதுக்கத்தில் தங்களின் கிளர்ச்சி தொடரும் என்று அறிவித்துள்ளது.

Add Comment