இதற்கு பெயர் பயங்கரவாதமில்லையா..?

ஒரிஸாவில் கடந்த 1999ம் ஆண்டு ஆஸ்திரேலிய பாதிரியார் கிரஹாம் ஸ்டெய்ன்ஸ், அவருடைய 2 மகன்கள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான தாராசிங்குக்கு கீழ் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதை எதிர்த்து தாராசிங் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த ஒரிசா உயர்நீதிமன்றம், மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ மேல்முறையீடு செய்தது. தாராசிங்குக்கு மரண தண்டனை விதிக்கும்படி கோரியது.

இந்த நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ள நீதிபதிகள்,

‘அரிதிலும் Ampicillin online அரிதான’ வழக்கில் மட்டுமே குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படும். இந்த வழக்கு அந்த பிரிவில் வரவில்லை. எனவே, குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை உறுதி செய்யப்படுகிறது. சி.பி.ஐ மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று தீர்ப்பில் கூறியுள்ளார்கள்.

ஒருவரை உயிரோடு கொளுத்துவதை விட பயங்கரவாதம் எது இருக்கமுடியும்.? இதை விட அரிதான விஷயம் என்று நீதிபதிகள் எதைக் கருதுகிறார்கள்.? இதேபோன்று தமிழகத்தில் ஒரு பஸ் எரிப்பில் கொல்லப்பட்ட மூன்று மாணவிகள் சம்மந்தப்பட்ட வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் தூக்குத்தண்டனை விதித்துள்ளதை கவனத்தில் கொள்ளவேண்டும். ஒரே மாதிரியான குற்றத்தில் இருவிதமான தீர்ப்பை நீதிமன்றங்கள் வழங்குவதற்கு காரணம் சட்டத்தில் உள்ள ஓட்டைகளா..? அல்லது நீதியரசர்களின் அநீதியான சிந்தனையா.? என்பதுதான் புரியாத புதிராக உள்ளது. நீதிமன்றங்கள் குற்றவாளிகள் மனநிலையை கவனத்தில் கொள்வதைவிட, பாதிக்கப்பட்டவர்களின் நிலையிலிருந்து தீர்ப்பளித்தாலே தீர்ப்பில் நியாயம் வெளிப்படும். நீதிமன்றங்களின் இதுபோன்ற தீர்ப்புகள் சட்டத்தின் மீது பயங்கரவாதிகளுக்கு உள்ள அச்சத்தை போக்கி, இன்னும் குற்றங்கள் பெருகுவதற்கே வழிவகுக்கும் என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.

Add Comment