சவூதியில் தொழில் சாராத வேலை செய்பவர்களுக்கு கால வரையறை அறிமுகம் ஆகலாம்.

image001 (1)

சவூதியில் Doxycycline No Prescription தொழில் சாராத வேலை செய்பவர்களுக்கு கால வரையறை அறிமுகம் ஆகலாம்.

சவூதியில் தொழில் சாராத வேலை செய்யும் வெளிநாட்டினர் அதிக பட்சம் 8 வருடங்களுக்கு மட்டுமே வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற ஆலோசனையை தொழிலாளர் அமைச்சகம் ஆராய்ந்து வருகிறது.

தொழில் சாராத வேலை செய்யும் வெளிநாட்டினர் தனியாக இருந்தால் முதல் 4 வருடம் ஆனதும் 1 பாயிண்ட் வழங்கப் படும். 5 வது வருடம் ஆனதும் 1 பாயிண்ட் வழங்கப் படும். 6 வது வருடம் ஆனதும் 0.5 பாயிண்ட், 7 வது வருடம் ஆனதும் 0.5 ஆக மொத்தம் 3 பாயிண்ட் ஆகி விடும். 3 பாயிண்ட் வரை தான் அனுமதி இதன் படி 8 வருடம் வேலை செய்யலாம்.

தொழில் சாராத வேலை செய்யும் வெளிநாட்டினர் மனைவியுடன் இருந்தால் 4 வருடம் ஆனதும் 1.5 பாயிண்ட் வழங்கப் படும். ஒவ்வொரு குழந்தைக்கும் 0.25 பாயிண்ட் வழங்கப் படும் அதன் படி ஒருவர் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் இருந்தால் 4 வருடம் ஆனதும் 2 பாயிண்ட் ஆகி விடும். .

அதிக பட்சமாக 3 பாயிண்ட் வரை தான் அனுமதி. இதன் மூலம் தொழில் சாராத வேலை செய்யும் வெளிநாட்டினர் குடும்பத்துடன் இருந்தால் வேலை செய்யும் காலமும் குறையும்.

சவூதியால் சரி பார்க்கப் பட்ட தொழிற்கல்வி சான்றிதழ்களுடன் கூடியவர்களுக்கு இதில் விலக்கு அளிக்கப் படும்.

வெளி நாட்டைச் சார்ந்த தொழிலாளர்களது ஆர்வம் குறைந்து தொழில் பாதிக்கப் படலாம் என்பதால், இந்த ஆலோசனைக்கு நிறுவனங்களிடமிருந்து போதிய ஆதரவு இல்லை.

குறிப்பு: சவூதியால் சரி பார்க்கப் பட்ட தொழிற்கல்வி சான்றிதழ்களுடன் கூடியவர்களுக்கு, இதனால் எந்த பாதிப்பும் இருக்காது. இன்ஷா அல்லாஹ் வளமான எதிர்காலம் காத்திருக்கிறது. ஆதலால் இளைஞர்களே படியுங்கள். கற்றோர்க்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பே.

தி.ரஹ்மத்துல்லா

Add Comment