ஈடன் கார்டன் ஆய்வு: ஐ.சி.சி., திருப்தி

கோல்கட்டா ஈடன் கார்டன் மைதானத்தில், ஐ.சி.சி., மைதான குழுவினர் மீண்டும் ஆய்வு நடத்தினர். பணிகள் ஓரளவுக்கு நிறைவு பெற்றதால், அவர்கள் திருப்தி அடைந்துள்ளதாக தெரிகிறது.
பத்தாவது உலக கோப்பை தொடரில், கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் மொத்தம் நான்கு போட்டிகள் நடக்க இருந்தன. ஆனால் மைதானத்தில் கட்டுமானப் பணிகள், நிறைவு பெறாத காரணத்தால், வரும் பிப்., 27ல், இங்கு நடக்க இருந்த இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையிலான போட்டியை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) பெங்களூருவுக்கு மாற்றியது.
இது கோல்கட்டாவில் பலத்த எதிர்ப்பை ஏற்படுத்தியது. இதனால் வெறுத்துப்போன கோல்கட்டா கிரிக்கெட் சங்கம் (சி.ஏ.பி.,) மைதான கூரை தொடர்பான பணிகளை, நான்காவது ஐ.பி.எல்., தொடர் முடிந்தவுடன் தான் துவங்குவோம் என தெரிவித்தது. இதனால் மீதமுள்ள 3 லீக் போட்டிகள் இங்கு நடக்குமா என்று சந்தேகம் ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று ஐ.சி.சி., மைதானக் குழுவினர், ஈடன் கார்டன் மைதானத்தில் மீண்டும் ஆய்வு நடத்தினர். மைதானம் முழுவதையும் சுற்றிப்பார்த்த அவர்கள், புதியதாக அமைக்கப்பட்ட இரண்டு கேலரிகள், “டிரசிங் ரூம்’ உள்ளிட்ட பலவற்றையும் பார்வையிட்டனர். “சைடு ஸ்கிரீன்களை’ நீண்ட நேரம் ஆய்வு செய்து கொண்டிருந்தனர். இந்த பணிகளில் திருப்தியடைந்துள்ள ஐ.சி.சி., மீதமுள்ள வேலைகளை வரும் 14ம் தேதிக்குள் முடித்து, பிப். 22க்குள் மைதானம் முழுமையாக தயாராக வேண்டும் என, தெரிவித்துள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து சி.ஏ.பி., இணைச்செயலர் பிஸ்வரப் தே கூறுகையில்,”” மைதானத்தில் உள்ள அனைத்து வசதிகளையும் அவர்களுக்கு Lasix online காட்டினோம். ஒட்டுமொத்தமாக அனைத்தையும் பார்வையிட்ட அவர்கள், எங்களிடம் எதுவும் தெரிவிக்கவில்லை,” என்றார்.
இதையடுத்து ஐ.சி.சி., சம்மதிக்கும் பட்சத்தில் வரும் மார்ச் 15, 18, 20 தேதிகளில் இந்திய அணி பங்கேற்காத மூன்று லீக் போட்டிகள் இங்கு நடக்கும்.

ஐ.சி.சி.,க்கு எதிர்ப்பு
ஈடன் கார்டனில் இந்திய அணி விளையாட இருந்த போட்டியை பெங்களூருவுக்கு மாற்றிய ஐ.சி.சி., குழுவுக்கு, கோல்கட்டாவில் நேற்று கருப்பு கொடி காட்டி, பெரும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மைதானத்தின் முன் திரண்ட ரசிகர்கள், ஐ.சி.சி.,க்கு எதிர்ப்பு கோஷங்களை எழுப்பினர்.

Add Comment