கடையநல்லூர் அருகே மீண்டும் சாலை விபத்து ஒருவர் பலி!

கடையநல்லூர் அருகே பாதயாத்திரையாக வந்த பக்தர் லாரி மோதி இறந்தார். மேலும் ஒரு பக்தர் காயம் அடைந்தார்.

மாலை அணிந்தனர்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள முகவூர் கிருஷ்ணன் கோவிலைச் சேர்ந்த ராமன் மகன் ராகவன் (வயது 41).

இவரும் அதே ஊரைச் சேர்ந்த பாண்டி கனகராஜ் (30), பெருமாள் (41), அஜய்குமார் (14), சுந்தர் (22) ஆகியோரும் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்ல மாலை அணிந்து Buy Ampicillin Online No Prescription இருந்தனர்.

பாதயாத்திரை

பின்னர் கடந்த 5–ந்தேதி முகவூரில் இருந்து பாதயாத்திரையாக சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு போவதற்காக நடந்து வந்து கொண்டிருந்தனர்.

நேற்று நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டிக்கு வந்து சேர்ந்தனர். அங்கு உள்ள சந்தன மாரியம்மன் கோவிலில் இரவு தங்கி விட்டு நேற்று அதிகாலை 4 மணிக்கு மீண்டும் பாதயாத்திரை தொடங்கினர்.

லாரி மோதி சாவு

சொக்கம்பட்டியை அடுத்துள்ள திரிகூடாபுரம் நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை 4–30 மணியளவில் நடந்து வந்து கொண்டிருந்தனர்.

BenQ Corporation

அப்போது ராஜபாளையம் அருகே உள்ள ஆலங்குளத்தில் இருந்து சிமெண்டு பாரம் ஏற்றிக் கொண்டு தென்காசி அருகே உள்ள இலத்தூருக்கு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி திடீரென பாதயாத்திரை பக்தர் ராகவன் மீது மோதியது. இதில் அவர் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மற்றொரு பக்தர் பாண்டி கனகராஜ் காயம் அடைந்தார்.

டிரைவர் கைது

பக்தர்கள் மீது மோதிய லாரி அந்த இடத்தில் நிற்காமல் தொடர்ந்து சென்று கொண்டிருந்தது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் சொக்கம்பட்டி போலீசார் அருகில் உள்ள இலத்தூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே இலத்தூர் போலீசார் விரைந்து சென்று தென்காசி அருகே உள்ள ஈனா விலக்கு அருகே சென்று கொண்டிருந்த லாரியை மடக்கி நிறுத்தினர்.

விசாரணையில் லாரியை ஓட்டி வந்தனர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த இருள்ளப்பபிள்ளை மகன் முருகேசன் (62) என்பது தெரியவந்தது. உடனே அவரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து சொக்கம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ராகவனுக்கு மஞ்சுளா என்ற மனைவியும், செல்வாத மன்ற மகனும், துளசிலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.

நன்றி:நாராயணன்,பஷீர்

Add Comment