உலக கோப்பை: பிரவீண் குமார் “அவுட்?’

காயம் காரணமாக உலக கோப்பை தொடரில் இருந்து இந்திய வீரர் பிரவீண் குமார் வெளியேறுவது உறுதியாகி உள்ளது. இதனால் ஸ்ரீசாந்த் அல்லது இஷாந்த் சர்மாவுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.
தென் ஆப்ரிக்க தொடரின் போது சச்சின் (தொடையின் பின் பகுதி), சேவக் (தோள் பட்டை), buy Lasix online காம்பிர் (கை விரல்), பிரவீண் குமார் (வலது முழங்கை) போன்ற இந்திய வீரர்கள் காயம் காரணமாக, பாதியில் நாடு திரும்பினர். உலக கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இவர்கள், தொடர் துவங்கும் முன் குணமடைந்து விடுவார்கள் என்று நம்பப்படுகிறது. சமீபத்தில் சேவக், ஜாகிர் கான், ஆஷிஸ் நெஹ்ரா ஆகியோர் முழுமையாக மீண்டனர்.
இந்நிலையில் பெங்களூரு தேசிய அகாடமியில், “பிட்னஸ்’ தேர்வில் இருக்கும் பிரவீண் குமார் கூறுகையில்,”” எனது பயிற்சிகள் சரியான பாதையில் சென்று கொண்டுள்ளது. உலக கோப்பை தொடருக்கு முன் சரியாகி விடுவேன் என்று நம்பிக்கையுள்ளது,” என்றார்.
ஆனால் இவரது காயம் இன்னும் முழுமையாக சரியாகவில்லை என்று தெரிகிறது. இவரது நிலை குறித்து பி.சி.சி.ஐ., தரப்பில் இருந்து யாரும் கருத்துதெரிவிக்கவில்லை. இதனால் பிரவீண் குமார் உலக கோப்பை தொடரில் இருந்து நீக்கப்படலாம் என்று தெரிகிறது. இவருக்குப்பதில் ஸ்ரீசாந்த், இஷாந்த் சர்மா, வினய் குமார் ஆகிய மூவரில் ஒருவர் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

Add Comment