கடையநல்லூரில் விருந்து அழைப்பில்லாமல் நடந்த திருமணம்!

கடையநல்லூரில் விருந்து அழைப்பில்லாமல் நடந்த திருமணம்!
கடையநல்லூரில் சமீபத்தில் ஒரு திருமணம் ஒன்று நடைபெற்றது.
அபப்டி என்ன ஸ்பெஷல் அந்த திருமணத்தில் என்பதுதான் எல்லோரது கேள்வியும்.

DSC_0322

நடந்து முடிந்த திருமணத்தின் அழைப்பிதழில் “ அன்று மதியம் எங்களது இல்லத்தில் நடைபெறும் திருமண விருந்து உபசரிப்பு “ நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளுமாறு வேண்டி இருந்தார்கள்.இதுதாங்க இங்க ஹைலைட்
கடையநல்லூரில் பெரும்பாலாக தெருக்களில் நடக்கும் திருமணங்களில் விருந்துக்காக வீடுதோறும் சென்று அழைப்பது என்பது வழக்கம்.அவ்வாறு அழைப்பதற்க்கென்று காலை 6 மணிமுதல் திருமணம் நடைபெறும் வீடுகளின் குடும்ப உறுப்பினர்கள் அல்லது அந்த வட்டாரத்தில் இருக்கும் நபர்கள் தனியாகவோ அல்லது இருவரோ சேந்து யார் யாரை விருந்துக்கு அழைக்க வேண்டும் என குறிப்பிட்ட லிஸ்ட்டில் உள்ள அனைவரின் வீடுகளுக்கும் சென்று அழைப்பது வழக்கம்.
அவ்வாறு அழைக்கும் பொழுது எதாவது சில வீடுகள் விடுபட்டிருந்தால் அதையே ஒரு பெரிய குறையாக காரணம் காட்டி திருமணத்திற்கே வாரதவர்களும் உண்டு.
DSC_0284
இதுதாங்க இன்று பெரும்பாலாக கடையநல்லூர் இஸ்லாமிய சமுதாயத்தில் நடக்கும் ஒரு சம்பிரதாயம்.
ஐயோ அப்பப்பா…என்னதாங்க சொல்ல வர்றீங்க… என்ற உங்களின் முனுமுனுபிற்கு முற்றுப்புள்ளியாக…
இப்படியாக நடைபெறும் சம்பிரதாயங்களுக்கு ஒரு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக கடந்த 05/01/2014  கடையநல்லூரில் ஜனாப் அல்ஹாஜ் பி .எஸ். முகம்மதலி  ஜின்னாஹ் அவர்களின் மகன் பி. எம். செய்யது மசூது -எஸ். ஜமீலா தம்பதியரின் திருமணம் நடைபெற்றது.
இந்த திருமண நிகழ்வில் விருந்து அழைப்பு என்று தனியாக இல்லாமல்திருமணத்தின் அழைப்பிதழில் “ அன்று மதியம் எங்களது இல்லத்தில் நடைபெறும் திருமண விருந்து உபசரிப்பு “ நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளுமாறு வேண்டி இருந்தார்கள்.
இந்த வேண்டுகோளை Ampicillin online திருமண அழைப்பிதழ் மூலமே ஏற்றுக் கொண்டு அனைவரும் விருந்தில் கலந்து கொண்டார்கள்.
என்னை நேரில் வந்து விருந்துக்கு அழைக்கவில்லையே என்று யாரும் குறைப்பட்டு வராமல் இருக்கவில்லை.
இது போன்ற நடைமுறையை ஏன் கடையநல்லூரில் உள்ள மற்றவர்களும் பின் பற்றக் கூடாது ?
திருமண அழைப்பிதழிலேயே விருந்தழைப்பையும் சேர்த்து விட்டால் கால விரயமும் நேர விரயமும் தவிர்க்கப் படுமல்லவா ?
நமதூர்வாசிகள் அனைவருமே இந்த வழி முறையைப் பின்பற்ற முயற்சிக்கலாமே…
இதுக்கு இவ்வளவு பெரிய பிரச்சாரம் தேவையா….இதெல்லாம் ஒரு பதிவா ? விருந்தே இல்லாமல் திருமணங்கள் நடந்து வருகிறது.மிக எளிமையான திருமணங்கள் நடந்து உள்ளது. வெறும் சாயா மற்றும் பிஸ்கட் கொடுத்து.

உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அழவே இல்லையா என்று நினைப்பவர்களும் உண்டு.

ஒ இதுவும் ஒரு நல்ல முயற்சிதான், நம்ம கூட ட்ரை பண்ணலாமே என சிந்திப்பவர்களும் உண்டு.

தகவல்:பி.எம்.கமால்

Add Comment