டெல்லியில் ஆம் ஆத்மி அறிமுகம் செய்த ஹெல்ப்லைனுக்கு 7 மணி நேரத்தில் 4000 ஊழல் புகார்கள்…

Arvind_Kejriwal_360_9Jan14

டெல்லியில் ஆம் ஆத்மி அறிமுகம் செய்த ஹெல்ப்லைனுக்கு 7 மணி நேரத்தில் 4000 ஊழல் புகார்கள்…

ஊழலுக்கு எதிரான கோஷத்துடன் டெல்லியில் ஆட்சியைப் பிடித்த ஆம் ஆத்மி கட்சி தனது ஊழல் தடுப்பு நடவடிக்கையை தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக மின்விநியோக நிறுவனங்களின் வரவு-செலவுகளை தணிக்கை செய்ய முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

லஞ்சம் கேட்ட அதிகாரிகள் நீக்கம், தண்ணீர் விநியோகத்தை சீரமைக்க 800க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இடமாற்றம் என அதிரடி நடவடிக்கையைத் தொடர்ந்து, ஊழலுக்கு online pharmacy no prescription எதிரான புகார்களைத் தெரிவிக்க தொலைபேசி எண்ணை (011-27357169) நேற்று அறிமுகம் செய்தார்.

காலை 8 மணி முதல் 10 மணி வரை இந்த எண்ணில் பொதுமக்கள் ஊழல் புகார்களை தெரிவிக்கலாம். இந்த எண்ணுக்கு வரும் அழைப்புகளில் நியாயமான அழைப்புகள் 15 வல்லுநர்கள் கொண்ட குழுவுக்கு அனுப்பப்பட்டு 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆம் ஆத்மி அரசின் இந்த தொலைபேசிக்கு 7 மணி நேரத்தில் 4000 அழைப்புகள் வந்துள்ளன. ஊழலுக்கு எதிரான புகார்கள் குவிந்தவண்ணம் உள்ளதால், விசாரணை நடத்தும் வல்லுநர்களின் எண்ணிக்கையை நாளை மூன்று மடங்காக அதிகரிக்கப்படும் என தெரிகிறது.

அதேசமயம் இந்த தொலைபேசி எண்ணை எளிதில் நினைவில் கொள்ளும் வகையில் விரைவில் 4 இலக்க எண்ணாக மாற்றவும் அரசு முடிவு செய்துள்ளது.

Add Comment