காக்கிச்சட்டையில் ஒரு காமக்கொடூரன்!

1526621_567131343371386_1043624732_n

காலையிலிருந்து இந்த சம்பவத்தை எழுதக் கூடாது என நினைத்தேன் சகோதரிகளும் எனது நட்பு வட்டத்தில் இருப்பதால் ஆனால் புதியதலைமுறை விவாதத்தில் போலீஸ் புனிதமானவர்கள் என்பது போல் பேசிய பேச்சை கேட்கும் போது சொல்லித்தான் ஆக வேண்டும் என்று நினைக்கிறேன்

பெரியகுளத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகளுக்குத் தாயான வசந்தி என்ற பெண் கடந்த பிப்ரவரி மாதம் 11ஆம் தேதியன்று, தான் அடகுவைத்த பொருளை மீட்பதற்காக நரியூத்து என்ற ஊருக்குச் சென்றுவிட்டு, மீண்டும் பெரியகுளம் திரும்புவதற்காக அன்றிரவு எட்டு மணி போல பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டு இருந்தார். அப்பொழுது அவர் முன்னால் திடீரென பைக்கில் வந்து நின்ற இரண்டு போலீசார் வசந்தியைச் சந்தேக கேஸில் கடமலைக்குண்டு போலீசு நிலையத்திற்கு வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று சட்டவிரோதக் காவலில் அடைத்து வைத்தனர்.

அன்றிரவு 11 மணிக்கு அப்போலீசு நிலைய ஆய்வாளர் இமானுவேல் ராஜ்குமார் வசந்தியை நெருங்கி, “கொஞ்சநேரம்தான், நான் சொல்றதைக் கேட்டா, உடனே உன்னை ஊருக்கு அனுப்பி வைக்கிறேன்னு” வக்கிரமாகப் பேசிக்கொண்டே, வசந்தியின் ஆடைகளை அவிழ்த்து, அவரைப் பாலியல் பலாத்காரப்படுத்த முயன்றான். வசந்தி அப்போலீசு அதிகாரியின் வக்கிரமான பசப்பு வார்த்தைகளுக்கு மயங்காமல் எதிர்த்து நின்று போராடியபொழுது, “ச்சீ நாயே…., ஒழுங்கா அவுத்துட்டுவா, இல்லைன்னா விபசார கேஸ் போட்டு நாளைக்குப் பேப்பர்ல உன்படம் வரும்” என அதிகாரத் திமிரோடு மிரட்டினான். அவனின் அம்மிரட்டலுக்கும் பணியாமல் வசந்தி அழுது ஆர்ப்பாட்டம் செய்து போராடவே, வசந்தியைத் தயார் செய்யும் வேலையை டூட்டியில் இருந்த ஒரு போலீசுக்காரனிடம் ஒப்படைத்தான் அப்போலீசு அதிகாரி.

அதிகாரியின் கட்டளையை ஏற்றுக் கொட்டடிக்குள் நுழைந்த காக்கிச் சட்டை அணிந்த மிருகமொன்று, வசந்தியை லத்தியைக் கொண்டு மாறிமாறித் தாக்கி, Buy Lasix அவரது ஆடைகளை வலுக்கட்டாயமாகக் களைந்து அம்மணமாக்கி, தனது டூட்டியைச் செய்தது. அதற்குப் பின் கொட்டடிக்குள் நுழைந்த ஆய்வாளர் இமானுவேல் ராஜ்குமார் வசந்தியின் எதிர்ப்பையும் மீறி, அவரைப் பாலியல் பலாத்காரப்படுத்தினான். இதனால் உதிரப் போக்கு அதிகமாகி, வசந்தி தன்னுணர்வு இழந்து மயக்கமடைந்தார்.

வசந்தியைச் சீரழித்த போலீசு அதிகாரி போன பிறகு, காவலுக்கு நின்ற போலீசார், வசந்தியை எழுப்பி, தரையில் ஒழுகித் தேங்கிக் கிடந்த இரத்தத்தை, அவரது சேலையைக் கிழித்துத் துடைக்கச் செய்தனர். வசந்தி இரத்தத்தையெல்லாம் துடைத்துவிட்டு, பாத்ரூம் போய்விட்டுத் திரும்பிய பிறகு, அப்போலீசு நிலையச் சிறப்புத் துணை ஆய்வாளர் அமுதனால் மீண்டும் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகி, மயக்கமடைந்தார். தங்களின் வக்கிரமான காமவெறியைத் தீர்த்துக் கொண்ட போலீசு, தமது கைஅரிப்பைத் தீர்த்துக் கொள்ள, அடகுப் பொருளை மீட்பதற்காக வசந்தி வைத்திருந்த 6,700 ரூபாயைத் தெனாவட்டாகத் திருடிக் கொண்டது.

வசந்தியின் மீது ஒரு திருட்டுக் குற்றத்தைச் சுமத்தி, அவரைச் சிறையிலும் தள்ளியது, கிரிமினல் போலீசு கும்பல். ஒரு மாதம் கழித்துச் சிறையில் இருந்து வெளியே வந்த வசந்தி நடந்த உண்மையை வெளியாட்கள் யாரிடமும் சொல்லிவிடக் கூடாது எனத் தொடர்ந்து போலீசாரால் மிரட்டப்பட்டதால், அவர் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொள்ள முயன்று காப்பாற்றப்பட்டார்.

“மேலிடம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையில் குற்றம் புரிந்த போலீசாரின் பெயர்களை வெளியிடவில்லை” எனக் குறிப்பிட்டு, வசந்திக்கு நேர்ந்த கொடுமைகளை அம்பலப்படுத்தி எழுதியது ஜூனியர் விகடன் (8.7.2012). ஆனால், அம்மாவட்ட போலீசு கண்காணிப்பாளர் பிரவீன் குமார் அபினபு, “திருட்டு வழக்கிலிருந்து தப்பிப்பதற்காகவே வசந்தி பொய் சொல்கிறார்” என அறிக்கைவிட்டு கிரிமினல் போலீசாருக்குச் சாதகமாக நடந்துவருவதையடுத்து, ஜூ.வி., வசந்தியைப் பாலியல் பலாத்காரப்படுத்திய இரண்டு போலீசு அதிகாரிகளின் பெயர்களையும் அம்பலப்படுத்தியது; “வசந்திக்கு இழைக்கப்பட்ட இக்கொடுமைகளைப் பற்றி சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க வேண்டும்; வசந்திக்குப் பாதுகாப்புத் தர நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என தவமணி என்ற வழக்குரைஞரும், மதுரையைச் சேர்ந்த எவிடென்ஸ் என்ற மனித உரிமை அமைப்பும் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருப்பதையும் சுட்டிக் காட்டியிருக்கிறது. (ஜூ.வி.25.07.2012)

(புகைப்படம்: காக்கிச்சட்டையில் ஒரு காமக்கொடூரன்: கடமலைக்குண்டு காவல் நிலைய ஆய்வாளர் இமானுவேல் ராஜ்குமார்)

நன்றி:ஜூ.வி,வலையுகம் ஹைதர் அலி

Add Comment