உடல் எடையை குறைக்க உதவும் மருந்துகள் இதயத்தை பாதிக்கும் – சிலிரைட்(Celerite) மாத்திரிகைகளுக்கு யு.ஏ.இயில் தடை

உடல் எடையை குறைக்க உதவும் மருந்துகள் இதயத் துடிப்பிற்கு பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உடல் எடையைக் குறைக்கவும், உடல் மெலியவும் பயன்படுத்தும் மாத்திரைகளில் அதிகமாக பயன்படுத்தப்படுவது sibutramine(சிபுட்ராமின்) என்ற வேதிப்பொருளாகும். இப்பொருள் இதய அதிர்ச்சிக்கு காரணமாக அமையும் என மருத்துவ உலக வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து sibutramine(சிபுட்ராமின்) வேதிப்பொருள் அடங்கிய மருந்துகளை சந்தையிலிருந்து Buy Cialis வாபஸ்பெற யு.ஏ.இ அதிகாரிகள் தீர்மானித்தனர். இதன் ஒரு பகுதியாக யு.ஏ.இ சந்தையில் கிடைத்த ‘சிலிரைட்'(celerite) மாத்திரைகளுக்கு தடை ஏற்படுத்தியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகத்தை மேற்கோள்காட்டி ‘கல்ஃப் நியூஸ்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதயத்தின் செயல்பாடுகளை மோசமாக பாதிக்கும் என்பதால் இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதயத்துடிப்பை அதிகரிக்கச் செய்யும் இம்மருந்துகள் இதயம் தொடர்பான நோய்களுக்கும், அதிக இரத்த அழுத்தத்திற்கும் காரணமாவதாக யு.ஏ.இ சுகாதார அமைச்சகத்தின் மெடிக்கல் ப்ராக்டீஸ் அண்ட் லைசன்ஸ் பிரிவு சி.இ.ஒ டாக்டர்.அமீன் அல் அமீரி தெரிவித்துள்ளார்.

ஃபுட் அண்ட் ட்ரக் அட்மினிஸ்ட்ரேசனின் உத்தரவின் படி இத்தடை விதிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

உடல் எடையைக் குறைக்க உதவும் மருந்துகளில் சில தேவையற்ற கலவைகள் உள்ளன. இவை பசியை இல்லாமலாக்கும். இதனால் சாப்பிடும் உணவின் அளவு குறையும். ஆனால், இவை கடுமையான உடல்நலனை சீர்கெடுக்கும் பல பிரச்சனைகளை உருவாக்கும் என அதிகமான புகார்கள் வெளியாகின.

இதயத்துடிப்பை மிக அதிகமாக அதிகரிக்கச் செய்யும் sibutramine(சிபுட்ராமின்) இதய அதிர்ச்சிக்கும், முடக்குவாதத்திற்கும் காரணமாகிறது என கண்டறியப்பட்டுள்ளது. இந்த வேதிப்பொருள் அடங்கிய இதர சில மருந்துகள் ஏற்கனவே யு.ஏ.இயில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.

ஃபாஸ்ட் ஃபுட் கலாச்சாரத்தை விரும்பும் மக்களைக் கொண்ட யு.ஏ.இயில் குழந்தைகள் உள்பட உடல் எடை கூடியவர்கள் அதிகரித்து வருகின்றனர். இதன் காரணமாக தங்கள் உடல் எடையை குறைப்பதற்காக இத்தகைய மருந்துகளை உபயோகிக்கின்றனர்.

Add Comment