சவூதி அரேபியா அரசாங்க துறைகள் சவூதி மயமாக்கப் படுகிறது.

image001 (3)

சவூதி அரேபியா அரசாங்க துறைகள் சவூதிமயமாக்கப் படுகிறது.

சவூதி அரேபியாவில் அரசாங்க வேலைகளில் வெளிநாட்டினர் வேலை செய்யும் இடங்கள் சவூதி அரேபியா பிரஜைகளால் நிரப்பவதற்கான நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. வெளிநாட்டினரை வேலையில் அமர்த்து வதற்கான 2607 விண்ணப்பங்கள் நிராகரிக்கப் பட்டுள்ளன. புதுப்பிப் பதற்கான 9267 வெளிநாட்டினர் ஒப்பந்தங்கள் மறுக்கப் பட்டுள்ளன.
சவூதி அரேபியா சிவில் சர்வீஸ் அமைச்சர் கூறியுள்ளதாவது:
மருத்துவ துறையில் அதிகமான வெளிநாட்டினர் வேலை செய்து வருகின்றாரகள். அவைகள் யாவும் படிப்படியாக தகுதியுள்ள சவூதி அரேபியா பிரஜைகளால் நிரப்புவதற்கான 5 ஆண்டு திட்டம் அரசாங்கத்தால் ஆணையிடப் பட்டுள்ளது. இத்திட்டம் 75 அரசாங்க துறைகளில் அமல் படுத்தப் படும்.

மேலும் அரசாங்கத்தில் ஒப்பந்தம் வேண்டும் தனியார் கம்பெனிகள் சவூதி அரேபியா பிரஜைகளை கண்டிப்பாக வேலையில் அமர்த்த வேண்டும்.

அதே போல் அரசாங்க துறைகளான SWCC (Saudi Water Conversion Corporation) and SEC (Saudi Electricity Company) போன்றவை களிலும் சவூதி இளைஞர் களுக்குப் போதிய பயிற்சி அளித்து வேலயில் அமர்த்த ஆயத்தங்கள் Buy Bactrim செய்யப்பட்டு வருகிறது.

சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ் கம்பெனியும் Ground operations including Aircraft Maintenance –ல் சவூதி இளைஞர்களுக்கு போதிய பயிற்சி அளித்து வேலயில் அமர்த்தப் போவதாக அறிவித்துள்ளது.

தி. ரஹ்மத்துல்லா.

Add Comment