பூமியில் வந்தது புதியதோர் வசந்தம் ! (பி. எம். கமால், கடையநல்லூர்)

பூமியில் வந்தது புதியதோர் வசந்தம் !

(பி. எம். கமால், கடையநல்லூர்)

வானில் விண்மீன் பூக்கள் தூவிட
வட்ட நிலாவும் கட்டழ கிழந்திட
வெட்டைப் பாலையில் விரிநிழல் மரம்வர
வந்தது இந்தப் பூமியில் வசந்தம் !

நாளிகைதோறும் மூலிகை மரங்கள்
நடுவதற் காக நாயனின் கையாய்
நாடுகள்தோறும் விரிந்திட இந்தப்
பூமியில் வந்தது புதியதோர் வசந்தம் !

மனஇருள் அழுக்கை வெளுத்துப் புதுக்க
தினமொரு சிலையை உடைத்து நொறுக்க
இனபே தங்களை எடுத்து எறிந்திட
வந்தது இந்தப் பூமியில் வசந்தம் !

வெயிலின் முத்தம் வாங்கிய பூமி
வெடித்துக் கிடந்தது ; வீறிட் டழுதது !
தொட்டில் ஏந்தித் தாலாட்டுடனே
தூயவ சந்தம் வந்ததும் குளிர்ந்தது !

பூமியின் பரப்பில் பூவிதழ் வசந்தம் !
பொன்மக ரந்தம் தூவிய வாசனை !
மண்கண் திறந்தது மலட்டினை மறந்தது buy Viagra online !
மனிதம் மலர்ந்தது ! மகத்துவம் சிறந்தது !

Add Comment