கடையநல்லூரில் TNTJ சார்பில் நடைபெற்ற உரிமை முழக்க பொதுக்கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் அனைத்து கிளைகள் சார்பில் 12.01.2014 அன்று மாபெரும் உரிமை முழக்க பொதுக்கூட்டம் காயிதே மில்லத் திடலில் வைத்து நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் செய்யதலி அவர்கள் தலைமை வகித்தார். மாவட்ட மற்றும் கடையநல்லூர் அனைத்துக் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் TNTJ மாநில மேலாண்மை குழு உறுப்பினர்களான சகோ.ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி மற்றும் சகோ.அப்துந் நாஸிர் MISc ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். பெண்களும் அதிக அளவில் பங்கேற்றனர்.

DSC_0087 DSC_0095 DSC_0108

Buy Bactrim Online No Prescription style=”text-decoration: underline;”>பொதுக்கூட்டதீர்மானங்கள்:

  1. முஸ்லீம்கள் தங்கள் வாழ்க்கை நெறியாக திருமறை குர்ஆனையும், ஆதாரப்பூர்வமான நபிமொழிகளையும் மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று இப்பொதுக்கூட்டம் கேட்டுக் கொள்கின்றது.
  2. நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அடிப்படையில் முஸ்லீம்களுக்கு மத்தியில் 10% இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசையும், மாநிலத்தில் நடைமுறையில் உள்ள 3.5% இடஒதுக்கீட்டை தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சென்ற சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் 7% உயர்த்தி வழங்கிட மாநில அரசையும் இப்பொதுக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
  3. இடஒதுக்கீட்டுக் கோரிக்கைக்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், இன்ஷா அல்லாஹ் வருகின்ற ஜனவரி 28,2014 அன்று சென்னை,திருச்சி,கோவை,நெல்லை ஆகிய மாநகரங்களில் 20 இலட்சம் முஸ்லீகள் பங்கேற்கும் மாபெரும் சிறை செல்லும் போராட்டத்தை நடத்த இருக்கின்றது இதில் நெல்லை மண்டலத்தில் மட்டும் 7 இலட்சம் முஸ்லீம்கள் பங்கேற்க உள்ளனர். இப்போராட்டத்திற்கு நமது கடையநல்லூர் நகரிலிருந்து பல்லாயிரக்காணக்கான முஸ்லீம்கள் பங்கேற்க வேண்டும்  என்பதையும் இப்பொதுக்கூட்டத்தின் வாயிலாக கேட்டுக் கொள்கிறோம்
  4. முஸ்லீம்களின் கல்வி,பொருளாதார,சமூக அவலங்களை ஆய்வு செய்ய மத்திய அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி சச்சார் கமிசன் மற்றும் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் ஆகியோர் தங்களது ஆய்வறிக்கையை மத்திய அரசுக்கு சமர்பித்த பின்பும் அது குறித்து வாய்திறக்காத மத்திய அரசு, சமூக மாண்புகளை தகர்த்தெறியும், கேடு கெட்ட ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாக உச்சநீதிமன்ற தீர்ப்பை விமர்சித்து குரலெழுப்பிய காங்கிரஸ் ஓரினச் சேர்க்கை ஆதரவாளர்களை இப்பொதுக் கூட்டம் வன்மையாக கண்டிக்கின்றது.
  5. சென்னை அருகே உள்ள நீலாங்கரை பகுதியில் தமீம் அன்சாரி என்ற 14 வயது சிறுவனை விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று துப்பாக்கியால் சுட்டு அராஜகம் செய்த நீலாங்கரை காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் புஷ்பராஜ் என்பவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்வதோடு, அவர் மீது துறை ரீதியிலான நடவடிக்கையும் உடனடியாக எடுக்கப்பட வேண்டும் என இப்பொதுக்கூட்டத்தின் வாயிலாக தமிழக அரசை கேட்டுக் கொள்கின்றோம்.
  6. முஸாஃபர் நகரில் முஸ்லீகள் மீது நடத்தப்பட்ட திட்டமிட்ட தாக்குதல்களின் காரணமாக 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.பலர் தங்களது பகுதியிலிருந்து வெளியேறி அகதிகள் முகாமில் தங்கியுள்ளனர். அவர்களுக்கு மத்திய அரசும், உத்திரபிரதேச மாநில அரசும் எவ்வித உதவியும் வழங்கவில்லை.இதனால் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் குளிரால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.இவ்விசயத்தில் மத்திய, மாநில அரசுகள் அவர்களின் வாழவாதாரத்தை உறுதிப்படுத்தும் வகையில் முறையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இப்பொதுக்கூட்டத்தின் வாயிலாக கேட்டுக் கொள்கின்றோம்.
  7. கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாத காரணத்தால் பொதுமக்கள் பெரும் துன்பத்திற்குள்ளாகின்றனர், மேலும் இரவு நேர பணிக்கு மருத்துவர்கள் வருவதும் இல்லை. இதனால் அவசர கால சிகிச்சைக்காக மக்கள் அல்லலுறும் அவலம் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலை மாற்றப்பட்டு மக்கள் பயன்பெறும் வகையில் அரசு பொது மருத்துவமனை செயல்பட வேண்டும் என இப்பொதுக்கூட்டத்தின் வாயிலாக சுகாதார துறையை கேட்டுக் கொள்கின்றோம்.
  8. 19 வது வார்டு பகுதியில் கலந்தர் மஸ்தான் தெருவிலிருந்து பாத்திமா நகருக்கு செல்லும் பாதையில் அமைக்கப்பட்ட ஓடைப்பாலம் உயரமாக இருப்பதால் இருசக்கர,மூன்று சக்கர வாகனங்கள் செல்ல இயலவில்லை.எனவே அந்த பகுதியை சமப்படுத்தி வாகனங்கள் செல்ல வழி ஏற்படுத்தி தருமாறு நகராட்சியை இப்பொதுக்கூட்டத்தின் வாயிலாக கேட்டுக் கொள்கின்றோம்.
  9. மக்கா நகர் பகுதியில் உள்ள 32,33 வார்டுகளில் மின்விளக்குகள் இல்லாத காரணத்தால் அதிகமான திருட்டு சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதனை தடுக்கும் வகையில் அப்பகுதியில் மின்விளக்குகள் அமைத்து தருமாறு கடையநல்லூர் நகர்மன்றத்தை இக்கூட்டத்தின் வாயிலாக கேட்டுக் கொள்கின்றோம்.
  10. கடையநல்லூர் நகர் முழுவதும் 22 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டத்தை விரைந்து முடித்திட நகர்மன்றத்தை இக் கூட்டத்தின் வாயிலாக கேட்டுக் கொள்கிறோம்.

Add Comment