இந்தியா முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நாளை ஆரம்பம்

நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நாளை தொடங்குகிறது. தகவல் தர மறுப்பவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கணக்கெடுப்பு பணி இயக்குனர்கள் தெரிவித்தனர்.

தமிழ்நாடு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி இயக்குனர் எஸ்.கோபாலகிருஷ்ணன் சென்னையில் நேற்று அளித்த பேட்டியில்:

இந்தியா முழுவதும் 2011ம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி வரும் 9 ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடக்கிறது. இதற்காக ரூ.2200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 150 நகராட்சிகளின் ஆணையாளர்கள் கணக்கெடுப்பு பணிக்கான பொறுப்பாளராக இருப்பார்கள். மற்ற இடங்களில் வட்டாட்சியர்கள் சென்னையில் மாநகராட்சி கமிஷனர் முன்னிலையிலும் இந்த பணி நடைபெறும். கணக்கெடுப்பு நடந்த வீடுகளில் ஸ்டிக்கர்கள் ஓட்டப்படும்.

முதல் கட்டமாக மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணியின் ஒரு கட்டமாக வீடுகள் கணக்கெடுப்பு பணிகள் கடந்த ஜூன் ஜுலை மாதங்களில் நடந்தது. அப்போது வீடுகள் கணக்கெடுக்கும் பணி முடிக்கப்பட்டது. அதில் எங்கு எங்கு மக்கள் வசிக்கின்றனர் எவ்வளவு வீடுகள் உள்ளன. மின்சார வசதி குடிநீர் வசதி போன்ற 12 தகவல்கள் சேகரிக்கப்பட்டன. அதன் அடிப்படையில் தற்போது 2வது கட்டமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடைபெறும். குறிப்பிட்ட 21 நாட்களில் கணக்கெடுப்பு பணி முழுவதுமாக முடிக்கப்படும். அதன் பின் காலக்கெடு எதுவும் நீட்டிக்கப்பட மாட்டாது.

இந்தியா முழுவதும் இந்த பணியில் ஆசிரியர் மற்றும் அரசு அதிகாரிகள் என 1.50 லட்சம் பேர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சென்னையில் மட்டும் 9 ஆயிரம் பேர் ஈடுபடுகின்றனர். ஒருவருக்கு அதிகபட்சமாக 200 குடும்பங்கள் என்ற வகையில் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது. 8 பேர் கொண்ட குடும்பத்திற்கு ஒரு படிவம் உபயோகப்படுத்தப்படும். அதற்கு மேற்பட்டவர்கள் இருந்தால் கூடுதல் படிவம் உபயோகிக்கப்படும். மக்கள் தொகை கணக்கெடுப்பில் விடுபடும் விகிதம் 1.7 சதவீதமாக உள்ளது. இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது இந்த விகிதத்தை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கணக்கெடுப்பின்போது பெயர் பிறந்த தேதி திருமணம் ஆனவரா, தாய்மொழி இடம்பெயர்ந்தவரா, ஊனமுற்றவரா, வேலை வாய்ப்பு, குழந்தைகள், எத்தனை மதம், போன்ற 29 வகையான விவரங்கள் கேட்கப்படும். மாற்று திறனாளிகள் எவ்வளவு பேர் உள்ளனர் எந்த வகையில் பாதிப்பு உள்ளது என்ற விவரமும் பதிவு செய்யப்பட உள்ளது. கணக்கெடுப்பு பணி நடைபெறும்போது ஊரில் எவ்வளவு நாட்கள் உள்ளனர் எங்கிருந்து வந்தனர் போன்ற விவரங்கள் சேகரிக்கப்படும். குடும்பத்தில் இருப்பவர் ஒருவர் வெளியூரில் இருந்தால் அவரது பெயர் சேர்க்கப்படாது. மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரம் ரகசியமாக வைக்கப்படும்.

அதனால் தயக்கம் இல்லாமல் அனைத்து விவரங்களையும் பொதுமக்கள் தெரிவிக்கலாம். இந்த பணியில் ஈடுபடுவோருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அவர்களிடம் மட்டுமே தகவல் கொடுக்க வேண்டும். கணக்கெடுப்பாளர்கள் வரும்போது விவரம் தெரிந்த ஒருவர் வீட்டில் இருந்து தகவல்களை கூறினால் போதுமானது.
சில பள்ளி நிர்வாகம் மற்றும் மத்திய அரசு ஊழியர்கள் சிலரும் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட மறுத்தனர். சட்ட திட்டங்களை விளக்கி கூறியபின்னர்

அவர்கள் கணக்கெடுப்பு பணிக்கு வர சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு அரசின் பல்வேறு முடிவுகள் எடுக்க காரணமாக அமையும். எனவே கணக்கெடுப்பு பணிக்கு வரும் அலுவலர்களிடம் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஒத்துழைப்பு கொடுக்க மறுப்போர் மீது மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு கோபாலகிருஷ்ணன் கூறினார். பேட்டியின்போது மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒருங்கிணைப்பாளரும் மாநகராட்சி ஆணையருமான தா.கார்த்திகேயன் துணை ஆணையாளர் (வருவாய் மற்றும் நிதி) அனுஜார்ஜ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

புகாருக்கு இலவச எண்கள்

மக்கள் தொகை கணக்கெடுப்பவர்கள் வீடுகளுக்கு வரவில்லை என்றால் 1800 3450 111 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகார்களை தெரிவிக்கலாம். சென்னையில் மாநகராட்சியின் புகார் எண் 1913க்கு தகவல் தெரிவித்தால் போதும். சம்பந்தப்பட்ட கணக்கெடுப்பாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அந்த பகுதியில் கணக்கெடுப்பு பணி நடைபெறும். கணக்கெடுப்பு பணியின் இறுதி நாளான பிப்ரவரி 28ம் தேதி மாலை 6 மணிக்கு மேல்இ நடைபாதையில் வசிப்பவர்கள் மற்றும் வீடு இல்லாதவர்கள் குறித்து கணக்கெடுக்கப்பட உள்ளதாக கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

Buy Bactrim style=”text-align: justify;”>ஒத்துழைக்காதவர்களுக்கு ஓராண்டு வரை தண்டனை

மக்கள் தொகை கணக்கெடுப்பாளருக்கு ஒத்துழைக்காதவர்கள் மீது மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டத்தின் கீழ் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுகிற அதிகாரிகளே வழக்குப்பதிவு செய்யலாம். அவ்வாறு வழக்குப்பதிவு செய்தால் 3 மாதம் முதல் ஓராண்டு வரை சிறைத் தண்டனையோ அல்லது ஆயிரம் ரூபாய் அபராதமோ விதிக்கப்படலாம் என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி இயக்குநர் கோபாலகிருஷ்ணன் கூறினார்.

Add Comment