என்னை போல் பலருக்கும்…,

‘ காந்தி’களுக்கும்.,
‘ நிதி’களுக்கும்.,
என்றாகி
விட்டன …பதவிகள் …

இந்தியா ஒரு
வித்தியாசமான நாடு ,
பணக்காரனை
கோடீஸ்வரனாக்கும்….
ஏழையை இன்னும்
ஏழ்மையாக்கும்….

Buy Bactrim Online No Prescription style=”text-align: justify;”>பத்திரிக்கைகள்.,
பிரச்சினைகளை
பரபரப்பாக்கி..
பணம் பார்க்கின்றன …
அன்று மட்டும்…

அந்நிய வங்கிகளும்
இந்திய ரூபாய்களில்
கிறங்கி கிடக்கின்றன

வாக்காளர் பட்டியல்
உயிருள்ளவனை
மரணிக்கும்..,
மரணித்தவனுக்கு
உயிர் கொடுக்கும் …

இலங்கை
ராணுவமும் அடிக்கடி
துப்பாக்கிகளை
பரிசோதித்து பார்கின்றன …
நம் ..,
கடற்கரையோரங்களில் .,

‘கோயில்லா ஊரில்
குடியிருக்க வேண்டாம்’–அன்று
‘கோட்டூர் கிடைக்கும்
ஊரில் ..
குடியிருந்தே ஆக
வேண்டும்’-இன்று …

இந்த.,
வாழ்க்கை
ஓட்டங்களிலும் …
தேடல்களிலும் …
இடையில் நின்று
பேசவும் நேரமில்லை …
எதிர்க்கவும் ..
துணிவு இல்லை …
…..என்னை போல் ….
பலருக்கும்…,
–சு.அப்துல் ஹக்கீம் ..,திருநெல்வேலி ….

Add Comment