ஈடன் கார்டனில் மூன்று போட்டிகள்

கோல்கட்டா ஈடன் கார்டன் மைதானத்தில், இந்திய அணி பங்கேற்காத மூன்று லீக் போட்டிகள் Bactrim No Prescription நடத்தப்பட உள்ளது.
பத்தாவது உலக கோப்பை தொடரில் கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் மொத்தம் நான்கு போட்டிகள் நடக்க இருந்தன. ஆனால் கட்டுமானப் பணிகள், நிறைவு பெறாததால், வரும் பிப்., 27ல், இங்கு நடக்க இருந்த இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையிலான போட்டியை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) பெங்களூருவுக்கு மாற்றியது.
மீதமுள்ள போட்டியை நடத்துவதற்கு நேற்று முன்தினம், ஐ.சி.சி., மைதானக் குழுவினர், ஈடன் கார்டன் மைதானத்தில் மீண்டும் ஆய்வு நடத்தினர். இதுகுறித்து ஐ.சி.சி., தலைமை அதிகாரி ஹாருன் லார்கட் கூறியது:
மைதான ஆய்வு குறித்த முதற்கட்ட தகவல் வந்துள்ளது. கடந்த ஜன. 25ம் தேதி நடந்த ஆய்வுக்கு பின், தற்போதைய நிலை திருப்தி தரும் வகையில் உள்ளது. இதனால் இங்கு அடுத்த மூன்று போட்டிகளை (வரும் மார்ச் 15, 18, 20) குறிப்பிட்ட தேதிகளில் நடத்தும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையிலான போட்டியை மீண்டும் ஈடன் கார்டனுக்கு மாற்றுவது என்பது கடினமான காரியம். ஏனெனில் போட்டியை மாற்றுவதற்குரிய அனைத்து வேலைகளையும், மீண்டும் குறுகிய நாட்களுக்குள் செய்ய முடியாது.
இவ்வாறு லார்கட் தெரிவித்தார்.
தகவல் இல்லை:
இதுகுறித்து கோல்கட்டா கிரிக்கெட் சங்க தலைவர் டால்மியா கூறுகையில்,”” ஈடன் கார்டன் மைதானம் குறித்து, இம்முறை எந்த சிக்கலிலும் ஈடுபட விரும்பவில்லை. மைதானம் குறித்து இதுவரை எந்தபதிலும் வரவில்லை. ஒருவேளை ஐ.சி.சி.,யிடம் இருந்து கடிதம் வந்தால், அனைவருக்கும் தெரிவிப்பேன்,” என்றார்.

Add Comment