மைக்கேல் ஹசி, ஹாரிட்ஸ் நீக்கம் *ஆஸி.,க்கு பின்னடைவு

காயம் காரணமாக மைக்கேல் ஹசி, நாதன் ஹாரிட்ஸ் ஆகியோர், உலக கோப்பை ஆஸ்திரேலிய அணியில் இருந்து நீக்கப்பட்டனர். இது அணிக்கு பெரும் இழப்பாக கருதப்படுகிறது.
உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணி, தனது முதல் பயிற்சி போட்டியில் வரும் 13ம் தேதி, இந்திய அணியுடன் மோதுகிறது. இந்நிலையில் வீரர்களுக்கான பிட்னஸ் தேர்வு நேற்று நடந்தது. இதில் ஹாரிட்ஸ் (தோள்பட்டை), மைக்கேல் ஹசி (தொடையின் பின்பகுதி), கேப்டன் பாண்டிங் (கை விரல்), ஸ்டீவ் ஸ்மித் (இடுப்பு), பிராட் ஹாடின் (முழங்கால்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் முடிவில் ஹசி, ஹாரிட்ஸ் இருவருக்கும் “ஆப்பரேஷன்’ செய்ய வேண்டிய நிலை உள்ளதால், தொடர்ந்து இவர்கள் போட்டிகளில் பங்கேற்பது அபாயகரமானது என தெரிவிக்கப்பட்டு, அணியில் இருந்து நீக்கப்பட்டனர். இவர்களுக்குப் பதிலாக கிரெஜ்ஜா, பெர்குசன் வாய்ப்பு பெற்றுள்ளனர்.
இதுகுறித்து ஆஸ்திரேலிய அணி தேர்வுக்குழுத் தலைவர் ஆன்ட்ரூ ஹில்டிச் கூறுகையில்,”” இங்கிலாந்துக்கு எதிரான online pharmacy without prescription ஒருநாள் தொடரின் போது பல வீரர்கள் காயம் அடைந்தனர். இதில் ஹசி, ஹாரிட்ஸ் இருவருக்கும் காயம் குணமடையவில்லை. ஹசிக்குப்பதில் ஷான் மார்சை சேர்க்கலாம் என்றால், அவரும் காயத்தில் உள்ளார். இதனால் ஐ.சி.சி.,யிடம் அனுமதி பெற்று, இந்திய ஆடுகளத்தில் அனுபவம் பெற்ற கிரெஜ்ஜா, பெர்குசனை அணியில் சேர்த்துள்ளோம்,” என்றார்.

Add Comment