உலக கோப்பை அணியில் ஸ்ரீசாந்த் *பிரவீண் குமார் பரிதாபம்

ஸ்ரீசாந்த் பக்கம் அதிர்ஷ்டம் அடித்தது. உலக கோப்பை இந்திய அணியில் வாய்ப்பு பெற்றார். காயம் காரணமாக உலக கோப்பை இந்திய அணியில் இருந்து பிரவீண் குமார் நீக்கப்பட்டார்.
தென் ஆப்ரிக்க தொடரின் போது காயமடைந்த சச்சின் (தொடையின் பின் பகுதி), சேவக் (தோள் பட்டை), காம்பிர் (கை விரல்) போன்ற இந்திய வீரர்கள் ஒவ்வொருவராக மீண்டு வருகின்றனர். ஆனால் வலது முழங்கையில் காயம் அடைந்த பிரவீண் குமாரின் நிலை பரிதாபமாகியுள்ளது.
உலக கோப்பை பயிற்சி போட்டியில் (பிப். 13) பங்கேற்க உள்ள நிலையில், பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் நடந்த உடற்தகுதி தேர்வில் பிரவீண் குமார் தேர்வாகவில்லை. இவருக்குப் பதிலாக ஸ்ரீசாந்த், தனது உடற்தகுதியை நிரூபிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டு இருந்தார்.
பிரவீண் நீக்கம்:
ஒருவேளை பிரவீண் காயம் சரியாகவில்லை என்றால், கர்நாடகாவின் வினய் குமாரை அணியில் சேர்க்க வேண்டும் என்று கேப்டன் தோனியும், பயிற்சியாளர் கிறிஸ்டனும் விரும்பியதாக தெரிகிறது. இதனிடையே காயம் சரியாகாத பிரவீண் குமார் இங்கிலாந்து சென்று, பிரபல டாக்டரிடம் சிகிச்சை எடுக்க இருப்பதால், உலக கோப்பை அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இவருக்குப் பதிலாக கேரள வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஐ.சி.சி., அனுமதி:
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) செயலர் சீனிவாசன் வெளியிட்ட அறிக்கையில்,”” முழங்கை காயம் காரணமாக பிரவீண் குமார் உலக கோப்பை அணியில் இருந்து Ampicillin No Prescription நீக்கப்படுகிறார். இவருக்குப்பதிலாக, இந்திய அணியில் ஸ்ரீசாந்தை தேர்வு செய்வது என, அணித் தேர்வுக்குழுவினர் முடிவு செய்தனர். இதனை ஐ.சி.சி.,யிடமும் தெரிவித்து விட்டோம்,” என்றார்.
பின்னர், ஸ்ரீசாந்த் தேர்வை, ஐ.சி.சி., ஏற்றுக்கொண்டது.
ஸ்ரீசாந்த் மகிழ்ச்சி:
இந்திய உலக கோப்பை அணியில் தேர்வு செய்யப்படாத நிலையில்,”” எனது இதயமே நொறுங்கி விட்டது,” என, தெரிவித்து இருந்தார் ஸ்ரீசாந்த். இப்போது மீண்டும் அணியில் இடம் பெற்றது குறித்து ஸ்ரீசாந்த் (28) கூறியது:
உலக கோப்பை இந்திய அணியில் இடம் பெற்றது என்பது மிகப்பெரிய வாய்ப்பு. தென் ஆப்ரிக்க தொடரில் சிறப்பாக செயல்பட்டதற்காக கிடைத்த பரிசாக இதை எண்ணுகிறேன். இது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அணியில் எந்த வேலை கொடுத்தாலும் என்னால் முடிந்த அளவு சிறப்பாக சாதிக்க முயற்சிப்பேன். அணியில் எப்படியும் இடம் பெற வேண்டும் என, கடவுளிடம் தொடர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டிருந்தேன். அது வீண் போகவில்லை.
தவிர, இந்திய துணைக்கண்டத்து ஆடுகளங்கள் குறித்து அதிக கவலைப்படத் தேவையில்லை. ஜாகிர் கான், நெஹ்ரா, முனாப் படேல் ஆகியோர்கள் இதற்கு முன் உலக கோப்பை போட்டிகளில் பங்கேற்ற அனுபவம் வாய்ந்தவர்கள். நாங்கள் இணைந்து உலக கோப்பை தொடரில், முடிந்த அளவுக்கு சாதிக்க முயற்சிப்போம். இத்தொடர் முடியும் போது, இந்திய அணி தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் என்று நம்புகிறேன்.
அதேநேரம் காயம் குணமடையாமல் பிரவீண், அணியில் இருந்து நீக்கப்பட்டது துரதிருஷ்டவசமானது. இது மிகவும் சோகமானது. அவர் விரைவில் இதிலிருந்து மீள வேண்டும்.
இவ்வாறு ஸ்ரீசாந்த் தெரிவித்தார்.

Add Comment