240 மையங்களில் 20ம் தேதி வி.ஏ.ஓ தேர்வு நெல்லை மாவட்டத்தில் 63 ஆயிரம் பேர் பங்கேற்பு

நெல்லை மாவட்டத்தில் 240 மையங்களில் வி.ஏ.ஓ பணியிடங்களுக்கான எழுத்து தேர்வில் 63 ஆயிரத்து 510 பேர் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் காலியாக உள்ள வி.ஏ.ஓ பணியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி சார்பில் வரும் 20ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் எழுத்து தேர்வு நடக்கிறது. இத்தேர்வில் கலந்து கொள்பவர்களின் வசதிக்காக அனைத்து பகுதிகளிலும் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை நெல்லை, பாளை, அம்பை, தென்காசி, ஆலங்குளம், சங்கரன்கோவில், வள்ளியூர், நான்குநேரி உட்பட அனைத்து பகுதிகளிலும் 240 தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு எழுதுபவர்களுக்கு தனித்தனியாக ஹால் டிக்கெட்டுகள் அனுப்பபட்டு வருகிறது. மாவட்டத்தில் 63 ஆயிரத்து 510 பேர் வி.ஏ.ஓ தேர்வில் பங்கேற்கின்றனர். இவர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி மூலம் தனித்தனியாக ஹால் டிக்கெட்டுகள் அனுப்பபட்டு வருகிறது. தேர்வு மைய விபரம், தேர்வு எழுதும் போது கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகளும் அனுப்பபட்டுள்ளது. அதிகாரிகள் தீவிர ஆலோசனை: இத்தேர்வை முறையாகவும், சுமூகமாகவும் நடத்தும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் வருவாய்த் துறை மூலம் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தேர்வு மையங்களில் அடிப்படை வசதிகள், பஸ் வசதிகள் உட்பட அனைத்து வசதிகளும் செய்யும் அளவில் மாவட்ட அளவில் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டங்களும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் நடத்தப்படுகிறது. மேலும், ஒவ்வொரு மாவட்ட அலுவலர்களுடன் வீடியோகான்பரன்சிங் மூலம் டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகள் ஆலோசனை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்வின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதில் விவாதிக்கப்படுகிறது. மாவட்டத்தில் Buy cheap Cialis வி.ஏ.ஓ தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கையை நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று மதியம் வரை அதிகாரிகள் ஒரு வழியாக எண்ணி முடித்து “சாதனை’ படைத்தனர். எஸ்.எஸ்.சி தேர்வு: >இதற்கிடையில் வரும் 27ம் தேதி ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் சார்பில் மல்டி டாஸ்கிங் நான்-டெக்னிக்கல் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு நடக்கிறது. நெல்லை மாவட்டத்தில் வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் இன்ஜினியரிங் கல்லூரி, வண்ணார்பேட்டை சேவியர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகிய 2 மையங்களில் இத்தேர்வுகள் நடக்கிறது. இதில் 3 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளும் மும்முரமாக செய்யப்பட்டு வருகிறது.

Add Comment