மத்திய காங்கிரஸ் அரசுக்கு புதிய நெருக்கடி !

2G ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு முறைகேடு குற்றச்சாட்டிலிருந்து மத்திய அரசு காங்கிரஸ் அரசு இன்னும் மீளாதபோது, அதைவிடப் பெரிய மெகா முறைகேடுகள் குறித்த செய்தி வெளியாகியுள்ளதைத் தொடர்ந்து மத்திய அரசுக்கு புதிய நெருக்கடி எழுந்துள்ளது.

குஜராத் கலவரத்தை முன்னின்று நடத்திய வகையில் நரேந்திர மோடிக்கு நேரடி தொடர்புள்ளது என்று உச்சநீதிமன்றம் நியமித்த சிறப்புக்குழுவின் குற்றச்சாட்டைப் பிடித்துக்கொண்டு பாஜகவுக்கு செக் வைத்து இவ்வருட முதல் நாடாளுமன்றக் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்திவிடலாம் என்று நினைத்திருந்தது. இந்நிலையில் இஸ்ரோ நிறுவனம் அலைவரிசை ஒதுக்கீடு வழங்கியதில் அரசுக்கு ரூ.2 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்குத் தணிக்கைத் துறை தெரிவித்துள்ளது.

தகவல் தொடர்புக்காக விண்வெளியில் Amoxil No Prescription `இஸ்ரோ’ (இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்) அனுப்பும் செயற்கை கோள்கள் மூலமாக பெறப்படும் `எஸ் பாண்டு ஸ்பெக்ட்ரம்’ அலைவரிசை ஏல முறையில் அல்லாமல், தேவாஸ் என்ற தனியார் நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டதனால், அரசுக்கு ரூ.2 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்கு தணிக்கை துறை தெரிவித்துள்ளது.

பிரதமரின் நேரடி மேற்பார்வையில் செயல்படும் விண்வெளி கமிஷனின் கட்டுப்பாட்டில் உள்ள `இஸ்ரோ’விடம் இருந்து, இந்த ஒதுக்கீடு குறித்து பிரதமர் அலுவலகத்துக்கோ, விண்வெளி கமிஷனுக்கோ, மத்திய மந்திரி சபைக்கோ தகவல் அனுப்பப்படவில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டது.

இதுபற்றி விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டு இருப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்து உள்ளது. இந்த ஊழல் பற்றி கருத்து தெரிவித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஷகில் அகமது;”அரசுக்கு இழப்பேற்படுத்தும் இத்தகைய விவகாரங்கள் குறித்து பாராளுமன்ற பொதுக்கணக்கு குழு விசாரணை நடத்துவது வழக்கம்” என்றார்.

“ஏதாவது விவகாரத்தில் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டால் அதுபற்றி பொதுக்கணக்கு குழு விசாரணை நடத்தும் நடைமுறை உள்ளது. எனவே இந்த பிரச்சினையும் தானாகவே பொதுக்கணக்கு குழுவின் விசாரணைக்கு செல்லும்” என்று அவர் தெரிவித்தார்.

Add Comment