தேர்தலை முன்னிட்டு ரேஷன் கார்டு பெற நிப‌ந்தனைகள் த‌ள‌ர்வு – தமிழக அரசு அதிரடி

பொதுமக்கள் குடும்ப அட்டை பெறுவதற்கு இருந்துவந்த நிபந்தனைகளை தளர்த்தி தமிழக அரசு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

தற்போது புதிய குடு‌ம்ப அ‌ட்டைகளை விண்ணப்பித்த 60 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டு‌ள்ளது.

புதிய குடும்ப அட்டை பெற ஏற்கனவே இருந்த குடும்ப அட்டையில் தனது பெயரை நீக்கியதற்கான சான்றிதழை கொடுக்க வேண்டும் என்ற விதி உள்ளது. இதனால் குடு‌ம்ப அ‌ட்டை‌யி‌ல் பெயர் இல்லாதவர் புதிய குடு‌ம்ப அ‌ட்டை பெற முடியாத நிலை இருந்து வந்தது.

இந்த நிலையில் குடும்ப அட்டை பெற விரும்புபவர்கள், buy Doxycycline online தற்போது தாங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தின் அடையாள அட்டை அல்லது திருமண அழைப்பிதழ் ஆகியவற்றின் நகல்களை கொடுத்து புதிய குடு‌ம்ப அ‌ட்டைகளு‌க்கு விண்ணப்பம் கொடுக்கலாம். அவ்வாறு கொடுக்கப்படும் விண்ணப்பத்தின் மீது உரிய நடவடிக்கை எடுத்து விரைவில் குடும்ப அட்டை வழங்கப்படும் என சட்டப்பேரவையில் தமிழக உணவு அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார்.

Add Comment