இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இணையதள சந்திப்பு !

unnamed (15)

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இணையதள சந்திப்பு !

சமுதாயத்தின் தாய்ச்சபையான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இணைய தள நண்பர்கள் சந்திப்பு இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் பிப்ரவரி மாதம் 23ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கும்பகோணத்தில் ரயில் நிலையம் எதிரில் அமைந்துள்ள Pl . A Residency – ல் நடைபெற இருக்கிறது.

இந்நிகழ்ச்சிக்கு சமுதாய தலைவர் பேராசிரியர் முனீருல் மில்லத் K.M. காதர் மொஹிதீன் அவர்கள் தலைமை ஏற்க இருக்கிறார்கள். மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகிக்கிறார்கள். மாநில செயலாளராகிய நான் வருகை தரக்கூடிய தங்களை எல்லாம் வரவேற்க இருக்கிறேன். பிறைமேடை ஆசிரியரும், பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் M.அப்துல் ரஹ்மான் அவர்கள் அறிமுக உரை நிகழ்த்துகிறார்கள். மாநில பொது செயலாளர் K.A.M. அபூபக்கர் அவர்களும் மாநில பொருளாளர் M.S.A. ஷாஜஹான் அவர்களும், மாநில கொள்கை பரப்பு செயலாளர் காயல் மெஹபூப் அவர்களும், மாநில சட்டத்துறை செயலாளர் வழக்கறிஞர் ஜீவகிரிதரன் அவர்களும் வாழ்த்துரை வழங்க இருக்கிறார்கள்.

இந்நிகழ்ச்சியில் ஊடகத்துறை சேர்ந்த இருவர் நடத்தும் பயிலரங்கம் நடைபெற இருக்கிறது. நிகழ்ச்சியின் முடிவில் M.J.A. ஜமால் முஹம்மது இப்ராஹிம் நன்றி கூற இருகின்றார்.

காலை 10 மணிக்கு Buy Viagra துவங்க இருக்கும் நிகழ்ச்சி மதிய உணவு இடைவேளைக்கு பிறகும் தொடர்ந்து மாலை 4 மணிக்கு முடியும் அளவில் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

நிகழ்வில் ஊடகத்துறையில் நமது பங்களிப்பு பற்றியும், இணையத்தில் நமது கொள்கை, நமது வரலாறு, நமது பணிகள் மற்றும் தேர்தல் பற்றிய பிரசாரங்களை எவ்வாறு முன்னெடுத்து செல்வது என்பது பற்றி விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.

ஊடகம் மற்றும் இனைய தளத்தில் சமுதாய பணியாற்றும் தாய்ச்சபை நண்பர்கள் தவறாது பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்

அன்புடன்,
ஆடுதுறை A.M . ஷாஜஹான்
மாநில கல்விப்பணி செயலாளர், இ. யூ. முஸ்லிம் லீக்
தாளாளர், அஸ்- ஸலாம் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரி. ஆடுதுறை
மொபைல் எண் : 98948 94999 – 99659 04553

வருகை குறித்த தகவல்களை தெரிவிக்க கீழ் கண்ட எண்களில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம் :

ஆடுதுறை A.M . ஷாஜஹான் – 98948 94999
M.J.A. ஜமால் முஹம்மது இப்ராஹிம் – 98655 78600
கடையநல்லூர் S.K.M.ஹபிபுல்லாஹ் – 95786 16020
மேலப்பாளையம் அப்துல் ஜப்பார் – 98436 14197
வழுத்தூர் மக்கி பைசல் – 90951 22189
லால்பேட்டை அஹமது – 99949 77803

Add Comment