கடையநல்லூர் மாதக்கணக்கில் குடிநீர் சப்ளை இல்லை நகராட்சி அலுவலகம் முற்றுகை

3818_493584567418730_166070891_n

கடையநல்லூர் பகுதியில் மாதக்கணக்கில் குடிநீர் கிடைக்கவில்லை என குற்றம்சாட்டி நூற்றுக்கணக்கான பெண் கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

கடையநல்லூர் நெல்லை மாவட்டத்திலேயே பெரிய நகராட்சியாகும். இங்கு சுமார் 1 லட்சம் பேர் வசிக்கின்றனர். இங்கு தாமிரபரணி திட்டம் மூலமும், கடையநல்லூர் பெரியாற்று படுகையில் இருந்தும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நகருக்கு தினமும் சுமார் 80 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப் படும் நிலையில் தற்போது 20 லட்சம் லிட்டருக்கும் குறைவாகவே தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதால் பல இடங்களுக்கு சீரான குடிநீர் கிடைக்காமல் பொது மக்கள் சிரமப்படுகின்றனர்.

கடையநல்லூர் buy Levitra online குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண கடந்த திமுக ஆட்சி காலத்தில் ரூ.22 கோடி மதிப்பீட்டில் ஜெர்மன் நிதியுதவியோடு மேற்கொள்ளப்பட்ட புதிய குடிநீர் திட்டம் தற்போது ஆமை வேகத்தில் நடைபெறுவதால் மககள் குடிநீர் பிரச்னை தீராமல் உள்ளது. இந்நிலையில், நகராட்சி பகுதியில் 100க்கும் மேற்பட்ட ஆழ்குழாய் கிணறுகள் பல மாதங்களாக செயல் இழந்துள்ளதால் பொது மக்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர். ஆழ்குழாய் கிணறு களை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் போதிய நடவடிக்கை எடுககாததால் தண்ணீர் இல்லாமல் மககள் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று கடையநல்லூர் நகராட்சி 22, 24, 26 ஆகிய வார்டு பகுதிகளில் மாதகணக்கில் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என குற்றம்சாட்டி நூற்றுக்கணக்கான பெண்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே இந்நகராட்சியில் 2 ஆண்டுகளாக ஆணையாளர் இல்லாத நிலையில், பொறியாளரும் அலுவலகத்தில் இல்லாத தால் பெண்கள் யாரிடம் புகார் செய்வது என தெரியாமல் அலைக்கழிக்கப்பட்டனர். பின்னர் நகராட்சி இளநிலை பொறியாளர் அகமதுஅலி பொது மக்களை சமாதானப்படுத்தி சீரான குடிநீர் வழங்க ஆவண செய்வதாக உறுதியளித்தார். ஓரிரு தினங்களில் குடிநீர் பிரச்னை தீராவிட் டால் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட போவதாக பெண்கள் எச்சரிக்கை விடுத்து கலைந்து சென்றனர்.

நன்றி :தினகரன்
(முட்டணி இஸ்மாயில்)

Add Comment