துபாய்:இளம்பெண்ணை சித்திரவதைச் செய்து கொன்ற இந்தியருக்கு மரணத்தண்டனை

வீட்டு பணிப் பெண்ணை சித்திரவதைச் செய்து மூச்சுத் திணறடித்து கொலைச் செய்த எ.எஸ் என்ற 25 வயது இந்தியருக்கு துபாய் நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்துள்ளது. நீதிபதி அல் ஸயீத் முஹம்மதின் தலைமையிலான பெஞ்ச் இத்தீர்ப்பை வெளியிட்டது.

துபாய் நகரசபை க்ளீனிக்கிற்கு விசாவை புதுப்பிக்கத் தேவையான மருத்துவ சோதனை நடத்துவதற்கு காரில் அப்பெண்னை அழைத்துச் சென்ற அவ்வீட்டின் டிரைவரான இந்தியர் அப்பெண்னை பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளான். டிரைவரின் ஆசைக்கு இணங்க மறுத்த அப்பாவி பெண்ணை ஸ்கார்ஃப் துணியால் கழுத்தை இறுக்கி மூச்சுத் திணறடித்து கொலைச் செய்துள்ளான். பின்னர் அப்பெண்ணின் உடலை ஒரு பூங்காவில் கழிவுகள் கொட்டப்படும் இடத்தில் எறிந்துவிட்டு சென்றுள்ளான். பின்னர் வீட்டிற்கு வந்து ஸ்பான்சரிடம் அப்பெண்ணை காணவில்லை என கூறியுள்ளான்.

சில தினங்கள் கழித்து போலீஸார் அடையாளம் தெரியாத ஒரு பெண்ணின் உடலை கண்டெடுத்துள்ளனர். அப்பெண்ணின் புகைப்படத்தை பத்திரிகையில் வெளியிட்டனர். இப்புகைப்படத்தை பார்த்த அப்பெண்ணின் ஸ்பான்சர் போலீசில் விபரத்தை தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அப்பெண்ணை கடைசியாக அழைத்துச் சென்றது டிரைவரான இந்தியர்தான் என்பதை அறிந்து போலீஸ் அவரிடம் விசாரணை நடத்தியதில் டிரைவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளான்.

Levitra No Prescription style=”text-align: justify;”>செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Add Comment