நெல்லை மாவட்டத்தில் பறக்கும் படை “அதிரடி’ 12,297 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

நெல்லை மாவட்டத்தில் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் 12 ஆயிரத்து 297 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. நெல்லை கலெக்டர் ஜெயராமன் Buy cheap Levitra உத்தரவின் பேரில் டி.ஆர்.ஓ ரமண சரஸ்வதி அறிவுரையின்படி பறக்கும் படை தாசில்தார் அந்தோணிமுத்து தலைமையில் தனித் துணை தாசில்தார் சரவணன், தனி ஆர்.ஐ வேலாயுதம் மற்றும் பறக்கும் படை குழுவினர் அதிரடி சோதனை நடத்தினர். மாவட்டத்தில் கடந்த மாதத்தில் செங்கோட்டை, ஆய்குடி, திருவேட்டநல்லூர், திசையன்விளை, கீழப்பாவூர், ரஸ்தா, ஆறுமுகம்பட்டி, சொக்கம்பட்டி, சிந்தாமணி, பூலம், லெவிஞ்சிபுரம், காடுவெட்டி, ஆவுடையானூர், கீரைக்காரன்தட்டு பகுதிகளில் நடந்த சோதனையில் 12 ஆயிரத்து 297 கிலோ ரேஷன் அரிசி, 425 லிட்டர் மண்ணெண்ணெய், 36 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், போலி பதிவு, இருப்பு குறைவிற்காக 39 ஆயிரத்து 133 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் நடக்கும் முறைகேடுகள் மற்றும் பொது வினியோக திட்ட பொருட்களை சட்ட விரோதமாக பதுக்கி வைத்தல், கடத்துதல் குறித்த புகார்களை மாவட்ட வினியோக அலுவலருக்கு (94450 00379, 0462 – 2500761) என்ற எண்களிலும், பறக்கும் படை தாசில்தாருக்கு (94450 45630) என்ற எண்ணிலும் தகவல் தெரிவிக்கலாம் என்று கலெக்டர் ஜெயராமன் தெரிவித்தார்.

Add Comment