முஸ்லிம்களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் : த.மு.மு.க.வலியுறுத்தல்

முஸ்லிம்களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என த.மு.மு.க. மற்றும் ம.ம.க.வலியுறுத்தியுள்ளது. வடகரை தைக்கா காயிதே மில்லத் திடலில் த.மு.மு.க.மற்றும் ம.ம.க. பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ம.ம.க.தலைவர் முகம்மது இல்யாஸ் தலைமை வகித்தார். செயலாளர் முகம்மது இஸ்மாயில், ஆட்டோ சங்க த.மு.மு.க. தலைவர் குமாயூன் கபீர் முன்னிலை வகித்தனர். ம.ம.க. Cialis No Prescription பொறுப்பாளர் காதர் முகைதீன் வரவேற்றார். மாநில துணை பொது செயலாளர் தமீமுன் அன்சாரி, மாவட்ட தலைவர் மைதீன் சேட்கான், முன்னாள் மாவட்ட தலைவர் மில்லத் இஸ்மாயில், மாவட்ட செயலாளர் நைனார் முகம்மது, மாணவர் அணி வக்கீல் பேச்சிமுத்து சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றிக்கு பாடுபட வேண்டும். 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஊழலுக்கு பார்லி.,கூட்டுக்குழு விசாரணை வேண்டும். முஸ்லிம்களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். வடகரையின் அனைத்து பகுதிகளுக்கும் தாமிபரணி கூட்டு குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். வடகரை பழைய வாட்டர் டேங்க் கட்டடத்தில் மின் தீர்வை மையம் இயங்க வேண்டும். அடவிநயினார் நீர் பாசனம் மேட்டு கால்வாய் விவசாயத்திற்கு முறையாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என்பன போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாணவர் அணி செயலாளர் சேக்ஒலி நன்றி கூறினார்.

Add Comment