கடையநல்லூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட ஒரேநாளில் 117 பேர் மனு

கடையநல்லூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட நேற்று ஒரே நாளில் 117 பேர் விண்ணப்ப மனு கட்சி தலைமையிடம் அனுப்பியுள்ளனர். தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களப்பணியினை தீவிரப்படுத்தி வருகின்றனர். கூட்டணிகள் உறுதி செய்யப்படாத நிலையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சிகள் 234 தொகுதிகளில் போட்டியிடக்கூடிய தொகுதிகள் குறித்து சர்வே மேற்கொண்டு வருகின்றனர். இத்தகைய நிலையில் அதிமுக சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்பமுள்ளவர்களிடம் இருந்து அதிமுக தலைமை மனுக்களை பெற்று வருகிறது. நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை தேர்தல் களத்தில் கடையநல்லூர் தொகுதி அரசியல் சிறப்பு பெற்ற தொகுதியாக கருதப்படுவதால் இத்தொகுதியில் போட்டியிட அனைத்து அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுவதுண்டு. அதிமுகவில் இருந்து Buy Levitra Online No Prescription இத்தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து நேற்று ஒருநாள் மட்டுமே 117 பேர் விண்ணப்ப மனு அளித்துள்ளனர். ஏற்கனவே இத்தொகுதியில் போட்டியிட மாவட்ட செயலாளர் செந்தூர்பாண்டியன் விண்ணப்பம் அளித்துள்ளார். நேற்று அதிமுக கட்சி தலைமையகத்தில் மாவட்ட இளைஞரணி செயலாளர் சவுக்கை வெங்கடேசன், முன்னாள் அமைச்சர் நாகூர் மீரான், தொகுதி செயலாளர் பொய்கை மாரியப்பன், ஒன்றிய செயலாளர் வசந்தம் முத்துப்பாண்டி, மாவட்ட பிரதிநிதி பெருமையாபாண்டியன், நகர செயலாளர் கிட்டுராஜா மற்றும் கவுன்சிலர் முருகன், அமானுல்லா உட்பட 117 பேர் விண்ணப்ப மனு கொடுத்துள்ளனர். இத்தொகுதியில் கடந்த முறை அதிமுக சார்பில் போட்டியிட 287 பேர் விண்ணப்ப மனு செய்திருப்பதாக கூறப்பட்ட நிலையில் விரைவில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில் கடையநல்லூர் தொகுதியில் போட்டியிட அதிமுக சார்பில் விரும்புவோரின் எண்ணிக்கை 350யை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Add Comment