நம்ம ஊருல நடக்கிற இக்பால் நகர் பிரச்சனை தீர்ந்தபாடில்லை…

3818_493584567418730_166070891_n

தப்பா..? ரைட்டா..?

“அஸ்ஸலாமு அலைக்கும் மாப்பிளே.. என்னவே ரெம்ப நாளா அ+ளயே காணல.. நீங்களும் பொளைப்பத்தேடி பாஸ்போட தூக்கிக்கிட்டு வெளிநாடு போயிட்டியளோனு பாத்தேன், நல்லாயிருக்கியளா..? கொஞ்சம் சூடா ஒரு சாயாத்தாங்கோ..” என்றவாரே கூரைமேயப்பட்ட சாயாகடையில் நுழைந்தார் பெருமீத்தீன்.

“அலைக்கும் ஸலாம் மச்சான்.. வாங்கோ மச்சான். என்ன செய்றது.. நானும் நாலுபேற மாதிரி ஏதாச்சும் சம்பாதிச்சு நல்லயிருக்கலாமேனு நெனைச்சுத்தான் பாஸ்போட தூக்கிக்கிட்டு அங்கேயும், இங்கேயும் ஓடுனேன் ஏந்.. தரித்திரியம் என் பின்னாலயும், முன்னாலையுமுலோ ஓடிவருது. சாயாக்கடையில நின்ணோமா.. சாயா ஆத்தி கொடுத்தோமானு யில்லாம ஊருல நடக்குற உண்மைய சொல்லப்போவ.. லாரிமேல ஏறிக்கிட்லோ பிரச்சினை என்னை தொரத்திக்கிட்டு வருது!” என்று அழுக்கு கரையுடன் கிழிந்த பனியனையும் போட்டுக்கிட்டு ஆடியாடி சாயாப் போட்டு பெருமீத்தீன் கையில் கொடுத்தார் டீ மாஸ்டர் மாலிக்.

டீ யை வாங்கி ரசனையோடு குடித்தவராய் “ அப்படி என்ன உண்மையவே சொல்லிட்டு சங்கடப்படுறியெ..” என்று பெருமீத்தீன் கேட்க.., உடுத்த கயிலிக்கு மேல் உடுத்திருந்த சாயாகடை யூனிபாம்மில் மூக்கையும் சிந்திக்கிட்டு

“வேற என்னத்த மச்சான் நான் சொல்லிடப்போறேன். எல்லாம் நம்ம ஊருல நடக்கிற இக்பால் நகர் பிரச்னையத்தான். இருந்தாலும் இருந்தாங்க.. சும்மவா யிருந்தாங்க இந்த கடையநல்லூர்.org காரங்க ‘லச்சமெல்லாம் நம்ம ஊர்ல காக்கா எச்ச மாதிரி ஆயிப்போச்சு’ ங்கிற தலைப்புல வந்தத நெல்லை நண்பன் ங்கிற புது மாதந்திர பத்திரிக்கையில வெளியிட… பள்ளிக்கூடம் முடுஞ்சும், மதறசா முடுஞ்சும் வருற சமயத்துல இந்த ஒண்ணுக்கத்தப் பசங்க ஒரு பைக்குல மூனூபேரு உக்காந்துக்கிட்டு டர்ர் புர்ர்ருனு சுத்திக்கிட்டு வர்றத்த செல பெரிய ஆளுங்க அமைப்புக் காரங்கிட்ட கம்ளைண்டு செய்ய. அமைப்புக் காரங்க அந்த ஒண்ணுக்கத்த பசங்களை கண்டிச்சானுவொளாம்.., பதிலுக்கு அந்தப் பசங்க அந்த அமைப்பைச் சார்ந்த பேனர கிழிக்க.., அமைப்புக்காரங்களுல செலபேரு அந்த பசங்கள அடிக்க.. இக்பால் நகரு பிரச்சினை ஆரம்பிச்சதுதான். ஆரம்பிச்ச தலைப்பு மாறி இப்போ அரசிலிலே வந்து நிக்குது……

எல்லோரும் எனக்கு வேண்டியவங்க மச்சான், யாரையும் குத்தம் கொற சொல்ல முடியல.. இருந்தாலும் குத்தம்.., நாயம்னு ஒன்னு உண்டுலே இதுல யாரு குத்தம் செஞ்சாலும் குத்தம் குத்தம்தானே மச்சான்.., குத்தம் செஞ்சவங்களுக்கு வக்கலாத்து வாங்கிப்போனா அது நாயம் இல்லில்லோ மச்சான்.., ராத்திரி நேரத்ல அடுத்தவங்கோ யாபாரம் செய்ய வற்ரதயே சரியில்லேணு சொல்றப்போ பட்டப்பகல்ல யெல்லாரும் இருக்கிறப்போதே நம்ம பசங்க…. படிச்சிட்டு, ஓதிட்டு வற்ர புள்ளைகளெ ஜோடி சேத்து பேசிக்கிட்டு பின்னால வற்ரதும்… சும்மலாட்டா ஒரு பைக்குலெ மூனு. நாலுபேரு உக்காந்துக்கிட்டு புள்ளைங்க தெருல வரிசியா வரையில டர்ர்ரு புர்ர்ருனு அந்த புள்ளையோ பயந்து ஓடுற மாறி பயங்காட்டிக்கிட்டு வந்தா நாயாமா? மச்சான். சரி.. இவனுவதான் இப்படி வற்றாங்கோனா.. அந்தப் புள்ளைகளாவது வரிசையா தெருவ அடைச்சிக்கிட்டு வராம ஒழூங்க ஓரஞ்சாராமா ஒதுங்கியாவது வருதுவளா? ஹாரன் அடுச்சாலும் விலக மாட்டேங்குதுவோ, அதையெல்லம் பாத்துக்கிட்டு சும்மா இருக்க முடியுமா மச்சான். எங்..கடையிலேயும் பள்ளிக்கூடம் விடுறப்போ பத்துஜாதி புள்ளையோ இந்த வழியா வீட்டுக்குப் Buy Viagra போவுதுவோ வருதுவோ.. அந்த டையத்த பாத்து கணக்குப்பண்ணி நெறைய பசங்கோ சாயாக்குடிக்க வற்ராங்கோ.., இது மெயின் பஜாரா யிருந்தாலும்.. அபடி விட்ர முடியுமா ? அம்புட்டு பேருட்டையும் நான் கட்டனெட்டா சொல்லிட்டேன். இந்த நேரத்தை கணக்குப்பண்ணி இங்கே யாரும் சாயாக்குடிக்க வந்தியோணா சாயா தரமாட்டேன் வெண்ணியெப் பிடிச்சு மூஞ்சியில ஊத்திடுவேனு சொல்லிட்டேன். ஏதோ யாபாரம் நடந்தா போதும்னு நானிருந்தா எப்படி மச்சான். அந்தமாதிரி; அந்தந்த பகுதிலே டர்ர்ரு புர்ர்ருனு போரவங்கள புடுச்சு நிறுத்தி பைக்க புடுங்குங்கோ….. காரணம் இல்லாம ரவுண்டடிக்கிறது நின்னுபோவும், அதுமட்டுமில்லே பொம்பள புள்ளையளுக்கு பின்னால வற்ர பசங்களையும் ‘ஏலே நாளைக்கு ஒன்ன இதுமாதிரி புள்ளையளுக்கு பின்னால வற்ரத பாத்தேனா அவ்ளோதானு சொல்லி பாருங்கோ’ மறுநாள் இருந்து தெரு மாத்தி போவ ஆரம்பிச்சுடுவாங்க. இதெ சொல்லக்கூட பயந்துக்கிட்டு இருந்தா எப்படி..? மச்சான் நான் சொல்றது தப்பா..? ரைட்டா..?

“மாப்புளே நீங்கோ சொல்றது நாயந்தான். அநீதீ நடந்தா வாளாலோ.., கையாலோ.., சொல்லாலோ.., அல்லது சமிக்கையாலோ தடுங்கோனு அல்லாஹ் சொல்றான். இன்னைக்கு அவரவர் வீட்டிலயே ஆயிரமாயிரம் அநியாயம் நடக்குது அதைக்கூட அந்த ஊட்ல உள்ளவங்க தட்டிக்கேட்க மாட்டேங்குறாங்க, பெத்த புள்ளையளெ வெளியே போன எப்படி நடக்கனும்னு சொல்லி வளத்தா கொஞ்சமாவது அச்சப்படுங்கோ… அல்லாக்கு பயப்படுங்கோ. புள்ளையோ வளந்தா போதும் படிச்சா போதும், ஓதீ பட்டம் வாங்குனாபோதும்னு வளத்தா இப்டிதான்..? மாப்புளே.., எத்தன பேரு வக்த் தவராம கண்ணியமான தொழுவுற புள்ளையள வளக்றாங்க..,? எல்லா ஊட்டுலயும் தான் உண்டு தான் வேலையுண்டுனூ தான் ஏதொ இருக்காங்க.., என்ன செய்றது ? பெத்தவங்களே பிள்ளைங்கள கண்டிக்காம வளக்றப்போ மத்தவங்கள சொல்லி என்ன புரோஜனம் அல்லாஹ்தான் எல்லா மக்களுக்கும் நேர்வழி காட்டனும்” என்றவாறு சாயாவை குடித்துவிட்டு கடையைவிட்டு கிளம்பினார் பெருமீத்தீன்.

-செங்கோட்டையன்

Add Comment