யுவனுக்கு ஒரு மடல்…

64633_10152190856831113_1604088599_n
யுவனுக்கு ஒரு மடல்.
***********************************

உனை தீவிரவாதி என்று பழிக்க
தீவிரமாய் இருப்பார்கள்.

தொலைபேசியில் மிரட்டி தொல்லை
கொடுப்பார்கள்.

உனை தூக்கி வைத்து ஆடிய
திரைத்துறையால் நீ தூக்கி
எறியப்படலாம்.

ஆபாச வசைகளாலும் வக்கிர மொழிதலாலும்
உன் மனதை Buy Amoxil Online No Prescription குத்தி கிழித்து
சுய இன்பம் காண குறியாய் இருப்பார்கள்.

உன் தேடலுக்கு உள் நோக்கம்
கற்பித்து உன் செயலை
மலினப்படுத்தி ரசித்து மகிழ்வார்கள்.

காசுக்கு மாறினாய் என்று காரியம்
ஆற்ற முடியாததால்
பெண்ணுக்காக மாறியதாக
புண் படுத்தி பார்ப்பார்கள்.

இப்போதைய சூழ்நிலைகளில்
இஸ்லாத்தை ஏற்கவும் ஒழுகவும்
மனோதிடம் வேண்டும்.
ஏனெனில் இஸ்லாத்திற்கெதிராக
கட்டி வைக்கப்பட்ட கட்டுகதைகள்
அப்படி.

தவறாகவே புரிந்து கொள்ளப்பட்ட மார்க்கத்தை
நீ சரியாய் புரிந்து கொண்டு வந்திருப்பதால்
ஒரு முஸ்லிமின் நிகழ்கால வலிகளை
புரிந்து கொள்ள முடியும்.

இஸ்லாத்தின் மன ஈர்ப்பு விசை
உன்னை வசப்படுத்தி விட்டது

இனி.. படைத்தவனுக்கும் உனக்கும்
தரகர் இல்லை தடை இல்லை

இறைவன் உனக்கு அமைதியையும்
சமாதானத்தையும் வழங்குவானாக..

மெய்யெழுத்து உதயம்!
நன்றி :சீசன்ஸ் நீடூர்

Comments

comments

Add Comment