குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்காக “எக்கோ பார்க்”!

1897802_627847500602697_1276522734_n

குற்றாலம் ஐந்தருவி அருகே அமைக்கப்பட்டுள்ள எக்கோ பார்க், சுற்றுலா பயணிகள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லாமல் உள்ளது. எனவே உள்ளூர் நண்பர்கள் இதை ஷேர் செய்து, சுற்றுலா பயணிகளின் ஈர்ப்பை பெற உதவுங்கள்:

பொதுவாக, குற்றாலத்தில் மே மாதம் இறுதியில் சீசன் துவங்கி ஆகஸ்ட் மாதம் நிறைவடையும். அருவிகளில் தண்ணீர் இல்லாவிட்டாலும் ஆண்டு முழுவதும் குற்றாலத்தை ரசிக்க உருவாக்கப்பட்டது தான் எக்கோ பார்க். நீரூற்றுகள், சிற்பங்கள், புல் தரைகள், மலைப்பகுதி, 5 கி.மீ. தூரம் நடந்து செல்லும் வகையில் நடை பாதை, சிறுவர் பூங்கா, நறுமண தோட்டம், மலர் வனம், சாகச விளையாட்டுத் திடல், பசுமை குடில் போன்ற 22 வகையான சிறப்பம்சங்களை உள்ளடக்கியது எக்கோ பார்க். நெடிய மலைக்குன்றுகளும், சுற்றிச் சுற்றி செல்லும் பாதைகளும் பார்வையாளர்களை பரவசப்படுத்துகின்றன. 36 ஏக்கர் பரப்பளவில் இயற்கை மணம் வீசும் செடி, கொடிகளுடன் Amoxil No Prescription தோட்டக் கலைத்துறை இதை பராமரித்து வருகிறது. குழந்தைகள், பெரியவர்கள் அனைவரையும் குடும்பத்துடன் குதூகலப்படுத்துகிறது.வந்து பாருங்கள். வீட்டுக்குச் செல்ல மனமிருக்காது.

Add Comment