மாணவர்களுடன் ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட பள்ளி ஆசிரியர் கைது

arrest1512014

மாணவர்களுடன் ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

ஆசிரியர்

மானூர் அருகே உள்ள கானார்பட்டியில் புனித யோவான் நடுநிலைப்பள்ளி உள்ளது. அந்த பள்ளியில் கானார்பட்டியைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகிறார். பள்ளியில் ஆசிரியராக வில்சன் (வயது 48) என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த பள்ளி கானார்பட்டியைச் சேர்ந்த மாணவன் ஒருவன் 5–வது வகுப்பு படித்து வருகிறான்.

படிப்பில் சிறந்து விளங்கிய அந்த மாணவர் சில நாட்களாக பள்ளிக்கு செல்வதில் ஆர்வமின்றி காணப்பட்டான். இந்த நிலையில் இன்று அந்த மாணவனை அவனது தந்தை பள்ளிக்கு செல்லும் படி கூறினார். அதற்கு அந்த மாணவன் தான் பள்ளிக்கு செல்ல மாட்டேன் என அடம்பிடித்து உள்ளான். இதையடுத்து அவனது தந்தை மாணவனிடம் ஏன் பள்ளிக்கு செல்ல மறுக்கிறாய் என்று கேட்டு உள்ளார்.

மாணவர்களுடன் ஓரின சேர்க்கை

அதற்கு அந்த மாணவர் தனது வகுப்பு ஆசிரியர் வில்சன் காலையில் பள்ளி நேரத்துக்கு முன்பே வகுப்பறைக்கு வரவழைத்து தன்னிடம் தவறதாக நடந்து கொண்டதை கூறி உள்ளார். இதேபோல் மற்றொரு மாணவனிடமும் மாலையில் வகுப்பறையில் ஆசிரியர் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாகவும் Bactrim No Prescription கூறினான்.

கைது

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவனின் தந்தை இதுபற்றி மானூர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் வில்சனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

நன்றி:தினத்தந்தி

Add Comment