கடையநல்லூர்ல எப்படியோ இருந்த கொடி, இப்படியாயிப் போச்சே..?

1896871_730273603674059_1106760625_n

கடையநல்லூர்ல எப்படியோ இருந்த கொடி, இப்படியாயிப் போச்சே..?

“அஸ்ஸலாமு அலைக்கும்.. ஏய்.. மசூது என்னப்பா.., நல்லாயிருக்கிறியா..? எப்போ வந்தே..?” என்றவாரே சாயாக்கடைக்குள் நுளைந்தார் செய்யது.

“வா அலைக்கும் ஸலாம.; வாங்க மாமா.., நல்லாயிருக்கிறேன், வந்து ரெண்டு நாளாச்சு.. மாமா நல்லாயிருக்கீயளா..? ஊட்ல எல்லாரும் நல்லா யிருக்கிறாங்களா..? சாயா சாப்பிடுங்கோ.., இந்தா.. சேகனா. மாமாக்கு ஒரு சாயா போடுப்பா.., மாமா சினீ கொறச்சா இல்லே..” என்று செய்யதிடம் வினவியவனாய் நிர்க்க டீ மாஸ்டர் சேகனா

“அவ்வளவுக்கெலலாம் பாதிச்சீனீதான்”என்றவர். ஊருல நெறையப்பேரு இப்போ.. சீனீயில்லாமத்தான் சாயாக் குடிக்கிறாங்க இருந்தும் எனன்னமோ சீனீவெலெ கூடிக்கிட்டேதான் போவுது. ஆனா.. கொடிக்கு பின்னாலதான் கூட்டம் கொறஞ்சுக்கிட்டே வருது முன்னவெல்லாம் யானைமேல கொடிவந்தா.. ஊருல உள்ள பிள்ளைக்காடுகளும் பெரியங்கவளும் பொம்பளையுமா தெரண்டுவருவாங்க.. கொடிக்களைய தொட்டு முத்தமிடுவாங்க பூவு கொடுப்பாங்க.. கொடிக் களையில கெடக்கும் பூவே வாங்கி கண்ணுல ஒத்தியெடுப்பாங்கோ எல்லா எளவும் நடக்கும். ஆனால் இப்பவெல்லாம் யாரும் கண்டுக்கிடறதேயில்லை, எப்படியோ ஜேஜேனு இருந்த கொடி இப்படியாயிடுச்சே.., என்றார் சேகனா.

“ஆமா Buy cheap Levitra மாமா நான்கூட நேத்து நம்ம தெருவுல ஒரு கொடிவருவதெ பாத்தேன். யானையும், பாகனும் கொட்டுத்தட்டுறவனும்தான் வந்தாங்கோ ஒரு புள்ளையளக்கூடக் காணோம்..”
“இதெக்கல்லாம் என்ன காரணம்னு நெனைக்கிறே மசூது..?”
“எல்லாம் நம்ம அமைப்பு செய்ற விழிப்புனர்வுதான் மாமா..”

“நல்லா ஆளுச்சேந்தியோ.., அண்ணைக்கு வந்துதே.. அது மேலக்கச்சிக் கொடி, இன்னகொஞ்ச நாளுல கீழக்கச்சிக் கொடி வரும் பாருங்கோ.. பள்ளிக்கூட புள்ளையெல்லாம் கையில கலர்கொடியப் புடுச்சிக்கிட்டு அப்போ என்ன சொல்லுவியோ? அரசியலும், அமைப்புக்களிலும், காசுகொடுத்து பிரியாணி ஆக்கிக் கொடுத்தும் கூப்பிட்டு போற மாதிரி இப்போ யானைக்குப் பின்னால கொடி தூக்கிட்டுப் போகவும் காசு கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க.., மசூது இது நம்ம ஊரு..,

ஒத்துமைக்கு கட்சி வெச்சிருக்கோம்னு சொல்லிக்கிட்டு ஒவ்வொரு கட்சிலேயும் ஊர்லாப்பட்ட பீத்தெய வெச்சுக்கிட்டு அலைறாங்க, அப்பப்போ கீழக்கட்சி.. மேலக்கச்சினு உசுப்பேத்த செல ஆளுங்க அப்பப்போ மொழைப்பாங்க. இப்போ என்னவோ தெரியலே யானை பொளைப்பு இப்படியாயிப் போச்சு. இதுக்கெல்லாம் போயி அமைப்பெ சொல்லிக்கிட்டு இருக்கிறியே..,

யாரு இருந்தாலும் யாரு யில்லாட்டாலும் அவ்வப்போம் அல்லாவால ஒரு மாற்றம் இருந்துக்கிட்டேதான் இருக்கும் இதெ யாரும் தடுக்க முடியாது. நூந்தானோ.., இல்லே அவந்தானோனு காரணம் சொல்ல முடியாது மசூது.., வருமானமிருந்து செல பெரிசுஹோ பழைய கிதாபுகளெ தூக்கிட்டு புகழ் பாடிக்கிட்டு அலையத்தான் செய்யுதுவோ. அதுவோ கறை சேந்துதுனா பைத்தும் மொலூத்தும் கொடிக்கட்டும் அம்புட்டுத்தான்.

இப்பவே புள்ளையோ ஸ்கூலு மதறசா.., டியூசன், ஹோம் ஒர்க்குனு தாங்க முடியாம பாதி சாப்பிட்டும் சாப்பிடாமலும் தூங்கிடுதுவோ இதுல எங்கெ கொடிக்குப்பின்னால சுத்த நேரம். பாவம் எம்புடுத்தண்டி மரத்தையெல்லாம் இழுக்கிற யானை இப்போ சின்ன கொடிக்களைய தூக்கிட்டு ரெண்டு தெரு சுத்தவே களைப்பா போயி.., அடிமேல அடிவெச்சிக்கிட்டு நகளுது.. எண்ணைக்கு கேரளாவுல யானைக்கு மதம் பிடிச்சமாதிரி நம்ம ஊருல கொடி நேரத்திலே யானைக்கு மதம் பிடிக்குமோ அண்ணையோட ஓஞ்சிடும் இந்தக் கொடி. நான் சொல்றது சரியா? தப்பா மசூது. சரி பிரியா யிருந்தா அப்படியே வீட்டுப் பக்கம் வா…” என்றவாறு அங்கிருந்து புறப்பட்டார் செய்யது.

-செங்கோட்டையன்

Add Comment