சேப்பாக்கம் ஆடுகளம் சரியில்லை *கேப்டன் ஸ்மித் அதிருப்தி

சேப்பாக்கம் ஆடுகளம் சிறப்பானதாக இல்லை,” என, தென் Ampicillin online ஆப்ரிக்க அணியின் கேப்டன் ஸ்மித் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று முன் தினம் நடந்த உலக கோப்பை பயிற்சி போட்டியில், தென் ஆப்ரிக்க அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது. இப்போட்டிக்கான ஆடுகளம் இதுகுறித்து ஸ்மித் கூறியது:
சென்னை மைதானத்தின் ஆடுகளம் எதிர்பார்த்த அளவுக்கு தயாரிக்கப்படவில்லை. ஆடுகளத்தில் திருப்பம் ஏற்படும் என்று நினைத்தோம். ஆனால், மிகவும் மந்தமாக இருந்தது. இதனால் தென் ஆப்ரிக்க தொடரில் அசத்திய வேகப்பந்துவீச்சாளர் மார்னே மார்கல் மட்டுமே சோபிக்க முடிந்தது. உலக கோப்பை தொடரில் இன்னும் சில போட்டிகள் நடக்கும் போது, இம்மைதானம் எல்லோரது கவனத்தையும் ஈர்க்கும் என்று நினைக்கிறேன்.
வழக்கமாக கடுமையான போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இம்ரான் தாகிர், ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் சற்று “டென்ஷனுடன்’ காணப்பட்டார். இவர் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி சிறப்பாகவே செயல்பட்டார். இந்த உலக கோப்பை தொடரில் தனது முத்திரையை பதிப்பது உறுதி. இவர் தவிர, மற்ற அனைத்து மித வேகப்பந்து வீச்சாளர்களும் தங்கள் திறமை வெளிப்படுத்தியது மகிழ்ச்சியாக உள்ளது.
இவ்வாறு ஸ்மித் கூறினார்.

Add Comment