இந்தியா அமர்க்கள ஆரம்பம்! * பயிற்சியில் அபார வெற்றி * சுழலில் சிக்கியது ஆஸி.,

உலக கோப்பை தொடரை இந்தியா அமர்க்களமாக துவக்கியது. நேற்று நடந்த போட்டியில் 38 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. சுழலில் அசத்திய பியுஸ் சாவ்லா, ஹர்பஜன் இருவரும் அணியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தனர்.
பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப். 19ல் துவங்கவுள்ளது. இதற்கான பயிற்சி போட்டிகள் தற்போது நடக்கின்றன. பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடந்த போட்டியில் இந்திய அணி, “நடப்பு சாம்பியன்’ ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. “டாஸ்’ வென்ற கேப்டன் தோனி, பேட்டிங் தேர்வு செய்தார்.
காம்பிர் ஏமாற்றம்:
இந்திய அணிக்கு சேவக், காம்பிர் இணைந்து துவக்கம் தந்தனர். பிரட் லீயின் முதல் ஓவரில் ரன் எடுக்கத் திணறிய காம்பிர் (6), போலிஞ்சர் வேகத்தில் வீழ்ந்தார். மறு முனையில் வழக்கம் போல பவுண்டரி அடித்து, தன் ரன் கணக்கை துவக்கினார் சேவக். இவருடன் விராத் கோஹ்லியும் இணைய, ஸ்கோர் சீராக உயர்ந்தது.
சேவக் அரைசதம்:
விராத் கோஹ்லி 21 ரன்கள் எடுத்து வெளியேறினார். பின் வந்த யுவராஜ் ஒரு ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் தந்தார். அதிக எதிர்பார்ப்புடன் வந்த கேப்டன் தோனி (11) அணியை கை விட்டு சென்றார். கிரெஜ்ஜாவின் சுழலை சேவக் சிறப்பாக எதிர்கொண்டார். இவரது பந்தில் 2 பவுண்டரி விளாசி, ஒரு சிக்சர் விளாசி அரைசதம் அடித்த சேவக் (54), அவரிடமே போல்டானார்.
“மிடில் ஆர்டர்’ சொதப்பல்:
அடுத்து வந்த ரெய்னா (12), ஹர்பஜன் சிங் (4) இருவரையும், பிரட் லீ ஒரே ஓவரில் வெளியேற்றினார். பியுஸ் சாவ்லா “டக்’ அவுட்டாக, இந்திய அணி 138 ரன்னுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து திணறியது. பின் யூசுப் பதான், தமிழகத்தின் அஷ்வின் இணைந்தனர். இவர்கள் சற்று பொறுமையாக ரன்கள் சேர்த்து, அணியை மீட்க போராடினர்.
இந்தியா “ஆல் அவுட்’:
டேவிட் ஹசியின் ஓவரில் இரண்டு இமாலய சிக்சர்கள் அடித்து மிரட்டிய யூசுப் பதான் (32), அவரது பந்திலேயே கிரெஜ்ஜாவிடன் பிடி கொடுத்தார். ஜான்சன் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி அடித்த ஆஷிஸ் நெஹ்ரா 19 ரன்களில் பெவிலியன் திரும்ப, இந்திய அணி 44.3 ஓவரில் 214 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அஷ்வின் 25 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார்.
ஆஸ்திரேலியா சார்பில் பிரட் லீ 3, ஹாஸ்டிங்ஸ், டேவிட் ஹசி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
எளிய இலக்கு:
எளிய இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணிக்கு வாட்சன், பெய்னே ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. வாட்சன் துவக்கத்தில் இருந்தே அதிரடியில் மிரட்டினார். நெஹ்ரா ஓவரில் 2 பவுண்டரி விளாசிய இவர், முனாப் படேலின் ஓவரில் 3 பவுண்டரி அடித்தார். தொடர்ந்து மிரட்டிய வாட்சன் 33 ரன்கள் எடுத்தார்.
சாவ்லா அசத்தல்:
மறு முனையில் பெய்னே 37 ரன்கள் எடுத்து திரும்பினார். பின் வந்த கிளார்க்கை, சாவ்லா “டக்’ அவுட்டாக்கினார். சுழலில் ஆஸ்திரேலிய அணியை புரட்டி எடுத்த சாவ்லா, காமிரான் ஒயிட் (4), டேவிட் ஹசி (0) இருவரையும் ஒரே ஓவரில் திருப்பி அனுப்பினார். இவர் பெர்குசனையும் (8) விட்டுவைக்கவில்லை.
பாண்டிங் ஆறுதல்:
அஷ்வின் ஓவரில் 3 பவுண்டரி விளாசிய Buy cheap Levitra கேப்டன் பாண்டிங், அரைசதம் (57) அடித்து ஆறுதல் தந்தார். அபாராமாக விளையாடிக் கொண்டிருந்த இவர் தோனியின் “சூப்பர்’ ஸ்டம்பிங்கில் வெளியேற இந்திய அணிக்கு நம்பிக்கை அதிகரித்தது.
இந்தியா வெற்றி:
சற்று ஆறுதல் அளித்த ஜான்சன் (15), ஹர்பஜன் சுழலில் சிக்கினார். இதே ஓவரில் கிரெஜ்ஜாவையும், ஹர்பஜன் “டக்’ அவுட்டாக்கினார். கடைசியாக பிரட் லீயை (1) அஷ்வின் போல்டாக்க, ஆஸ்திரேலிய அணி 37.5 ஓவரில் 176 ரன்னுக்கு சுருண்டு, 38 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தியா சார்பில் பியுஸ் சாவ்லா 4, ஹர்பஜன் 3 விக்கெட் வீழ்த்தினர்.
வரும் 16 ம் தேதி சென்னையில் நடக்கும் இரண்டாவது பயிற்சி போட்டியில், இந்திய அணி, நியூசிலாந்தை சந்திக்கிறது.

ஸ்கோர் போர்டு
இந்தியா
காம்பிர்(கே)ஒயிட்(ப)போலிஞ்சர் 6(15)
சேவக்(ப)கிரெஜ்ஜா 54(56)
கோஹ்லி(ப)ஹசி(ப)ஹாஸ்டிங்ஸ் 21(33)
யுவராஜ்(ப)பெய்னே(ப)ஜான்சன் 1(7)
தோனி(ப)ஹாஸ்டிங்ஸ் 11(24)
ரெய்னா(ப)பெய்னே(ப)பிரட் லீ 12(16)
யூசுப்(கே)கிரெஜ்ஜா(ப)ஹசி 32(39)
ஹர்பஜன்(ப)பிரட் லீ 4(2)
சாவ்லா(ப)பிரட் லீ 0(6)
அஷ்வின்-அவுட் இல்லை- 25(46)
நெஹ்ரா(கே)கிரெஜ்ஜா(ப)ஹசி 19(24)
உதிரிகள் 29
மொத்தம் (44.3 ஓவரில் ஆல் அவுட்) 214
விக்கெட் வீழ்ச்சி: 1-12(காம்பிர்), 2-54(கோஹ்லி), 3-63(யுவராஜ்), 4-101(தோனி), 5-113(சேவக்), 6-132(ரெய்னா), 7-136(ஹர்பஜன்), 8-138(பியுஸ் சாவ்லா), 9-187(யூசுப் பதான்), 10-214(நெஹ்ரா).
பந்து வீச்சு: பிரட் லீ 10-1-35-3, போலிஞ்சர் 6-0-29-1, ஜான்சன் 9-0-42-1, ஹாஸ்டிங்ஸ் 6-0-24-2, கிரெஜ்ஜா 10-0-56-1, டேவிட் ஹசி 3.3-0-25-2.
ஆஸ்திரேலியா
வாட்சன்(கே)சாவ்லா(ப)ஸ்ரீசாந்த் 33(26)
பெய்னே(கே)முனாப்(ப)யுவராஜ் 37(57)
பாண்டிங்(ஸ்டம்டு)தோனி(ப)ஹர்பஜன் 57(85)
கிளார்க்(ப)சாவ்லா 0(4)
ஒயிட்(கே)அஷ்வின்(ப)சாவ்லா 4(13)
ஹசி(ஸ்டம்டு)தோனி(ப)சாவ்லா 0(1)
பெர்குசன்(கே)கோஹ்லி(ப)சாவ்லா 8(9)
ஜான்சன்(ஸ்டம்டு)தோனி(ப)ஹர்பஜன் 15(19)
ஹாஸ்டிங்ஸ்-அவுட் இல்லை- 1(3)
கிரெஜ்ஜா-எல்.பி.டபிள்யு.,(ப)ஹர்பஜன் 0(3)
பிரட் லீ(ப)அஷ்வின் 1(7)
உதிரிகள் 20
மொத்தம் (37.5 ஓவரில் ஆல் அவுட்) 176
விக்கெட் வீழ்ச்சி: 1-51(வாட்சன்), 2-118(பெய்னே), 3-120(கிளார்க்), 4-138(ஒயிட்), 5-138(ஹசி), 6-148(பெர்குசன்), 7-166(பாண்டிங்), 8-175(ஜான்சன்), 9-175(கிரெஜ்ஜா), 10-176(பிரட் லீ).
பந்து வீச்சு: ஆஷிஸ் நெஹ்ரா 2-0-12-0, ஸ்ரீசாந்த் 5-0-21-1, முனாப் படேல் 2-0-22-0, அஷ்வின் 9.5-0-47-1, பியுஸ் சாவ்லா 9-0-31-4, யுவராஜ் சிங் 5-0-19-1, ஹர்பஜன் சிங் 5-0-15-3.

Add Comment