இன்னொருமுறை பிறப்பாயா ? (பீ.எம். கமால், கடையநல்லூர்)

வெள்ளை இருட்டை
வெளுக்க வந்த
காந்தி மகாத்மா !
உன்
அஹிம்சைப் பாடப்
புத்தகத்தை
கிழித்து எறிந்த
கிறுக்கர்கள் நாங்கள் !

அஹிம்சை உனது
ஆயுதமானது !
இப்போதோ
உன்
கைத் தடி எங்கள்
ஆயுதமாக
ஆகிப் போனது !

உன்
அரை ஆடை
அலங்காரத்தை
எங்கள் நடிகைகள்
ஏற்றுக் கொண்டனர் !

நீ
அடிவாங்கி உதைவாங்கி
இடிதாங்கி ஆனாய் !
கொடிதாங்கி கொள்கைக்கு
உயிர்தந்து போனாய் !
உன்
கல்லறையில் உன்னோடு
அஹிம்சையையும் நாங்கள்
ஆழப் புதைத்து விட்டோம் !
அதனால் தான் நாடு
வன் முறையில் நாளும்
வசமிழந்து கிடக்கிறது !

உன்கொள்கை ஆட்சி
உருவாகி விட்டால்
உன்
கலிபா உமராட்சிக்
கனவு பலித்து விடும் !

நீ அந்தக்
கனவு கண்டதால்தானே
கயவர்கள் உன்னைத்
துப்பாக்கிக் online pharmacy without prescription கழுமரத்தின்
தூக்கில் தொங்கவிட்டார் !

கள்ள நோட்டிலும்கூட
கபடமின்றிச்
சிரிப்பவனே !
இந்தியாவில் நீ
இன்னொருமுறை பிறப்பாயா ?

Add Comment