கடையநல்லூர் பகுதியில்பள்ளி கூடுதல் கட்டடங்கள் திறப்பு

கடையநல்லூர் பகுதியில் 3 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய அரசு மேல்நிலைப் பள்ளிகளின் கட்டடங்கள் திறப்பு விழா நாளை (15ம் தேதி) நடக்கிறது. இதுகுறித்து பீட்டர் அல்போன்ஸ் எம்எல்ஏ கூறியிருப்பதாவது:- கடையநல்லூர் தொகுதி அச்சன்புதூர், நெடுவயல், வடகரை அரசு மேல்நிலைப்பள்ளி நபார்டு பாங்க் திட்டத்தின் கீழ் புதிய வகுப்பறை கட்டடங்கள், அறிவியல் ஆய்வு கூட கட்டடங்கள் கட்டுவதற்காக நிதியுதவி பெறப்பட்டது. சுமார் 3 கோடி ரூபாய் செலவில் இந்த கட்டடங்கள் கட்டுவதற்கான அனுமதி 3 மேல்நிலைப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டது. அதனடிப்படையில் கட்டுமான பணிகள் முடிவுபெற்றுள்ள நிலையில் நாளை (15ம் தேதி) இதற்கான திறப்பு விழா நடக்கிறது. புதிய வகுப்பறை கட்டடங்களை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைக்கிறார். அமைச்சர்கள் மைதீன்கான், பூங்கோதை, கலெக்டர் ஜெயராமன், எம்எல்ஏ கருப்பசாமிபாண்டியன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். விழா ஏற்பாடுகளை தலைமையாசிரியர்கள், பெற்றோர் ஆசிரிய கழகத்தினர், ஆசிரிய, ஆசிரியைகள் மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதனிடையில் நாளை அரசு மேல்நிலைப் Buy cheap Bactrim பள்ளிகளின் கட்டட திறப்பு விழாவிற்கு வருகை தரும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆகியோரை வரவேற்பதற்கான ஏற்பாடுகளை செங்கோட்டை யூனியன் சேர்மன் சட்டநாதன், வட்டார காங்., தலைவர்கள் கிளாங்காடு மணி, ஆலங்குளம் செல்வராஜ், கடையநல்லூர் தொகுதி இளைஞர் காங்., தலைவர் பண்பொழி வினோத், பொது செயலாளர் கதிரவன், அச்சன்புதூர் மாரிமுத்து, கென்னடி, பிச்சையா, மூப்பனார் பேரவை ராஜகோபால், வடகரை உசேன் மைதீன், ராமர் மற்றும் திமுக கூட்டணி கட்சியினர் செய்து வருகின்றனர்.

Add Comment