சாப்ட்வேர் நிறுவன பெண் ஊழியர் கொலை

1620643_680872768617526_1058122364_n

சென்னை : கேளம்பாக்கம் அருகே மாயமான சாப்ட்வேர் நிறுவன பெண் ஊழியர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.சேலம் மாவட்டம், ஆத்தூர் ஜோதி நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவரது மகள் உமா மகேஸ்வரி (23). சென்னை மேடவாக்கத்தில் அருண் என்பவரது வீட்டை வாடகைக்கு எடுத்து தோழிகளுடன் தங்கியிருந்து, சிறுசேரி சிப்காட்டில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.கடந்த 13ம் தேதி கம்பெனியில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரை வேலை செய்து விட்டு, இரவு 10.30 மணிக்கு வீட்டுக்கு புறப்பட்டார். Doxycycline online ஆனால், அவர் வீட்டுக்கு வந்து சேரவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த தோழிகள், அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டனர். ஆனால், அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து, அவரது பெற்றோருக்கும், கம்பெனிக்கும் தகவல் கொடுத்தனர். கடந்த 15ம் தேதி சென்னை வந்த பாலசுப்பிரமணியம், கேளம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.மகளை திருமணம் செய்ய, ஒருவர் பெண் கேட்டு வந்தார். அவரது நடவடிக்கைகளை விசாரித்தோம். அதில், எங்களுக்கு பிடிக்கவில்லை. இதனால், பெண் தர மறுத்துவிட்டோம் என்றும் பாலசுப்பிரமணியம் கூறினார். இதையடுத்து உமா மகேஸ்வரியின் செல்போன் தொடர்புகளை போலீசார் ஆய்வு செய்தனர். மேலும், சிறுசேரி சிப்காட் பகுதிகளில் உள்ள 80க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்களிடமும் விசாரித்தனர்.

இந்நிலையில், சிப்காட் நுழைவாயில் அருகே புதர் பகுதியில் அழுகிய நிலையில் பெண் சடலம் கிடப்பதாக நேற்று காலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது, சடலம் அருகே மாயமான உமா மகேஸ்வரியின் கம்பெனி அடையாள அட்டை, கைப்பை, மணி பர்ஸ் கிடந்தன. உடல் முழுவதும் அழுகி இருந்தது.எஸ்பி விஜயகுமார், மாமல்லபுரம் டிஎஸ்பி மோகன் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. இறந்து கிடந்தது உமா மகேஸ்வரி என போலீசார் உறுதி செய்தனர். இதையடுத்து சடலத்தை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். அவர் கொலை செய்து வீசியது யார் என போலீசார் விசாரிக்கின்றனர்.

தொடரும் சமூக விரோத சம்பவங்கள்

சிறுசேரி சிப்காட் பகுதியில் 50க்கு மேற்பட்ட தனியார் சாப்ட்வேர் கம்பெனிகள் உள்ளன. அந்த நிறுவனத்தில் ஏதாவது பிரச்னை என்றால் டிஜிபி அல்லது ஐஜி அலுவலகத்துக்கு இமெயில் மூலம் புகார் அனுப்புவர். அதன்பிறகு போலீசார், சம்பந்தப்பட்ட கம்பெனிக்கு சென்று விசாரிப்பார்கள்.இதுமட்டுமின்றி ஏராளமான தனியார் சாப்ட்வேர் கம்பெனிகளும், தனியார் அடுக்குமாடி குடியிருப்புகளும் இந்த பகுதியில் கட்டப்படுகின்றன. இங்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிமாநில தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். மேலும், குறைந்த ஊதியத்துக்கு வேலை செய்யும் இந்த தொழிலாளர்களை, உள்ளூர் சமூக விரோதிகள் மிரட்டி சம்பள பணத்தை பறிப்பது, அவர்கள் வாங்கி செல்லும் பொருட்களை பறிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதுகுறித்து போலீசாருக்கு பலமுறை புகார் சென்றாலும் கண்டு கொள்வதில்லை.

தாழம்பூர், கேளம்பாக்கம் ஆகிய காவல் நிலையங்கள் தகவல் தொழில்நுட்ப நெடுஞ்சாலையில் அமைந்து இருந்தாலும், தொழில்நுட்ப வளர்ச்சி என்பது காவல் நிலைய அளவில் சிறிதளவும் இல்லை. பல போலீசாருக்கு கம்ப்யூட்டரை இயக்கவே தெரியவில்லை. பெரும்பாலான புகார்கள் ஆங்கிலத்தில் வருவதால், அதை படித்து புரிந்து கொள்ளவும், அவர்களுக்கு போதிய திறன் இல்லாமல் உள்ளனர். இவர்களை வைத்து எப்படி சமாளிப்பது என்றே தெரியவில்லை என காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

போலீசார் மெத்தனம்

நேற்று முன்தினம் காலை முதல் சிப்காட் அருகில் பெண் சடலம் கிடப்பதாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து தாழம்பூர், கேளம்பாக்கம் போலீசாரிடம் கேட்டதற்கு பத்திரிகையாளர்கள் பரப்பிவிட்ட வதந்தி என கடிந்து கொண்டனர். ஆனால், செய்தியாளர்களுக்கு கிடைத்த தகவல் உண்மை என நேற்று காலை தெரிந்ததும், போலீசார் அவர்களை படம் எடுக்க அனுமதிக்கவில்லை.

நன்றி:தினகரன்

Add Comment