கடையநல்லூர் வட்டாரத்தில் விவசாயிகள் பயிற்சி

கடையநல்லூர் வட்டாரத்தில் தோட்டக்கலை இயக்கத்தின் மூலம் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் பயிற்சி நடந்தது. கடையநல்லூர் ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில் நடந்த பயிற்சிக்கு ஊராட்சி ஒன்றிய தலைவர் தீபக், துறை தலைவர் மாரியப்பன் தலைமை வகித்தனர். நெல்லை தோட்டக்கலை துணை இயக்குநர் ராஜன் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். பயிற்சியில் பஞ்.,தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டார். தோட்டக்கலைத்துறை இயக்குநர் புதிய தொழில்நுட்பத்துடன் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்வது பற்றி பயிற்சியளித்தார். வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் குணசேகரன் திட்ட விளக்க உரையை மிகவும் எளிய முறையில் கூறினார். மாவட்ட Levitra online துல்லிய பண்ணையம், தொழில்நுட்ப அலுவலர் இளங்கோ திரையில் விளக்கி காட்டினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர்கள் சின்னச்சாமி, முத்தையா, தனராஜ், அரிகரன் செய்திருந்தனர். உதவி வேளாண்மை அலுவலர் அரிகரன் நன்றி கூறினார்.

Add Comment