கடையநல்லூர் சுற்றுச்சூழல்ஆர்வலருக்கு விருது

கடையநல்லூர் சுற்றுச்சூழல் ஆர்வலருக்கு சார்ஜா அரசாங்கத்தின் பாராட்டு விருது கிடைத்துள்ளது.கடையநல்லூரை சேர்ந்த மண்ணியல் துறை முதுநிலை பட்டதாரியான ராஜ்குமார் சார்ஜாவில் பணியாற்றி வருகிறார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வனவிலங்கு வளம், இயற்கை பேரிடர் மேலாண்மை போன்றவற்றில் மிகுந்த ஈடுபாடு உடையவர். “இயற்கையின் நண்பர்கள் கழகம் இந்தியா’ என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து வருகிறார். சிறந்த புகைப்பட Buy Lasix Online No Prescription கலைஞரான இவரது இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் குறித்த புகைப்படங்கள் அயல்நாட்டு பத்திரிக்கைகளில் வெளிவந்து பாராட்டை பெற்றுள்ளன.
இயற்கை வளம் பராமரிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு போன்றவற்றை மக்களிடையேயும், பள்ளி மாணவர்களிடையேயும் ஏற்படுத்தி வரும் இவரது இச்சேவைகளை பாராட்டி சார்ஜா தொல்லியல் கண்காட்சித்துறை 2010ம் ஆண்டிற்கான சிறந்த சேவையாளர்க்கான விருதுக்கு தேர்வு செய்தது.சார்ஜா நாட்டில் தன் விருப்ப சேவையாளர் தினவிழாவில் சார்ஜா மியூசியம் துறையின் டைரக்டர் ஜெனரல் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் சார்ஜாவின் மன்னர் இப்பாராட்டு சான்றினை ராஜ்குமாருக்கு வழங்கினார்.
விருது பெற்ற ராஜ்குமாரை இயற்கை நண்பர்கள் கழக உறுப்பினர்கள், ப்ரண்ட்ஸ் ஆப் நேச்சர் தலைவர் இசக்கிலால்சிங், ஹரிணி வித்யாலயா சண்முகசுந்தரி, குற்றாலம் விக்டரி லயன்ஸ் சங்க டாக்டர் மூர்த்தி, கோல்டன் பிரீஸ் லயன்ஸ் சங்க டாக்டர் தங்கம்மூர்த்தி, அப்துல்கலாம் பேரவை ராஜகோபால்ராஜா, ட்ரஸ்ட் இந்தியா பவுண்டேசன் கணேஷ்ராம்சிங், ஹரிணி அகடமி சுப்பிரமணியன், மனித உரிமைகள் பேரவை ராஜாராம் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் பாராட்டினர்.

Add Comment