நமது ஊர்களில் எத்தனை தந்தைகள் மகளின் சம்மதம் கேட்டு மாப்பிள்ளை பார்கிறார்கள்-அபூபக்கர் சித்திக்

photo (2)

Love in a head scarf என்றொரு புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறேன் Shelina janmohamed என்ற இங்கிலாந்தை சேர்ந்த பெண் எழுத்தாளர் எழுதியிருக்கிறார்,அதில் தன்னையே கதையின் நாயகியாக உருவகப்படுத்தியிருக்கிறார்,அவளை பெண் பார்க்க வந்திருக்கும் ஒரு காட்சியை விவரித்து எழுதி அதன் பிறகு அவளுக்கும் அவளின் தந்தைக்கும் நடக்கும் உரையாடல் இப்படி நடக்கிறது…

“What is your opinion, Dad? Did you like him?”
“He seems nice,” he confirms. “It’s up to you now. Whatever you think you want to do.”

I pout

“We’re your parents,” he Buy Bactrim Online No Prescription continues.

“We can advise you but you are the one who has to live with him for the rest of your life.”

இன்னும் நமது ஊர்களில் எத்தனை தந்தைகள் மகளின் சம்மதம் கேட்டு மாப்பிள்ளை பார்க்கவும்,திருமணம் முடிக்கவும் செய்கிறார்கள்,இன்னும் சொல்லப்போனால் மகளுக்கும் தந்தைக்கும் இடையே மனம் திறந்த பேச்சு பரிமாற்றங்கள் மகள் பருவம் அடைந்தவுடனேயே நின்றுவிடுகிறது.

அதன் பிறகு தாயிடம் தான் அனைத்தும் தாய் மூலம்தான் அவர்களின் தேவைகள் தந்தைக்கு தெரியவருகிறது.

பல இடங்களில் தன்னை இன்று மாப்பிள்ளை பார்க்கவருகிறார்கள் என்பதே அன்றுதான் அந்த பெண்ணுக்கு தெரிகிறது.நாங்க என்னம்மா உன்ன கஷ்டத்துலயா தள்ளப்போறோம்,உனக்கு நல்லது தானே செய்வோம்,இந்த மாப்பிள்ளை நல்ல மாப்பிள்ளை என்று பெற்றோரின் விருப்பங்கள் பிள்ளைகளின் மேல் திணிக்கப்படுகிறது.

உனக்கு பெண் பார்க்கபோறோம் என்று சொன்னவுடன்,எனக்கு இந்த மாதிரித்தான் பொண்ணு இருக்கனும் அப்படி அழகா இருக்கனும்,சுண்டுனா ரத்தம் வரணும் என்று கட்டளையிடும் ஆண்பிள்ளைகளின் சொல்லுக்கேற்ப செயல்படும் பல குடும்பங்கள்,ஒரு முறை கூட ஒரு பெண்பிள்ளையிடம் உனக்கு இந்த மாதிரி மாப்பிள்ளை பார்க்க போறோம், நீ எந்த மாதிரி எதிர்பார்கிறாய்,உன் மனதில் ஏதேனும் அபிப்ராயங்கள் இருக்கா?என்று எழுபது சதவீத குடும்பங்களில் கேட்பதில்லை அப்படி ஒரு முறை கேட்டுப்பாருங்கள் அவர்களின் ஆசையும் தாகமும் புரியும் ஒரு தந்தை தன் பிள்ளைகளுக்கு அறிவுரை சொல்லும் நல்ல தகப்பனாகவும்,அவர்களிடம் மனம் விட்டு பேசி அவர்களின் ஆசாபாசங்களை அறியும் நல்ல நண்பனாகவும் இருக்வேண்டும் என்றே பிள்ளைகள் எதிர்பார்கின்றனர்.

அபூபக்கர் சித்திக்

Add Comment