‘போபால்’-ப.சிதம்பரம் தலைமையிலான புது குழுவில் அழகிரி

போபால் விஷ வாயு கசிவு சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவை மத்திய அரசு மாற்றியமைத்துள்ளது. இதன் தலைவராக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்றுத் தருவதற்காக 2004ம் ஆண்டில் அப்போதைய மத்திய மனிதவளத்துறை அமைச்சர் அர்ஜுன் சிங் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

இந் நிலையில் இப்போது இந்த விவகாரத்தில் வெளியான தீர்ப்புக்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில் அந்தக் குழுவை மத்திய அரசு மாற்றியமைத்துள்ளது.

ப.சிதம்பரம் தலைமையிலான இந்தக் குழுவில் மத்திய நலத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத், சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி, Buy cheap Doxycycline நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் கமல்நாத், ரசாயனத்துறை அமைச்சர் மு.க.அழகிரி, பிரதமர் அலுவலகத்துறை அமைச்சர் பிருத்விராஜ் சவாண், சுற்றுச்சூழல்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோரும், மத்திய பிரதேச மாநில அமைச்சர் ஒருவரும் இடம் பெறுவார்.

இந்தக் குழு பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் பெற்றுத் தரவும், மறுவாழ்வுப் பணிகளிலும் கவனம் செலுத்தும்.

ஆன்டர்சனை இந்தியா கொண்டு வர பலமுறை முயன்றோம்:

இந் நிலையில் போபால் விஷ வாயு கசிவு விவகாரத்தில் யூனியன் கார்பைடு நிறுவன முன்னாள் தலைவர் வாரன் ஆன்டர்சனை இந்தியா கொண்டுவர பலமுறை முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், அமெரிக்காவில் உள்ள வாரன் ஆன்டர்சனை இந்தியா கொண்டு வர அந் நாட்டு அரசிடம் 2003ம் ஆண்டு முதன்முறையாக கோரிக்கை விடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 2008ம் ஆண்டு செப்டம்பர் வரை இந்திய வெளியுறவு அமைச்சகம் சார்பில் அமெரிக்க அரசிடம் பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து மத்திய அரசு முடிவெடுக்கும். அதன் அடிப்படையில், வெளியுறவு அமைச்சகம் செயல்படும்.

குற்றவாளிகளை பரஸ்பரம் ஒப்படைக்கும் இந்திய- அமெரிக்க ஒப்பந்தத்தின்படி, ஆன்டர்சனை ஒப்படைக்கத் தேவையான ஆதாரங்களை அளிக்கவில்லை என்று அமெரிக்க அரசு தொடர்ந்து கூறி வருகிறது. இது தொடர்பாக கூடுதல் ஆதாரங்களை அளிக்குமாறு சிபிஐயிடம் கேட்டு வருகிறோம்.

அமெரிக்காவுக்கான முன்னாள் இந்திய தூதர் ரொனென் சென், சிபிஐ இயக்குனருக்கு எழுதிய கடிதத்தில், ஆன்டர்சன் வழக்கில் தேவையான ஆதாரங்களை அளிக்குமாறு கேட்டிருந்தார் என்றார் அந்த அதிகாரி.

ஆன்டர்சனை இந்தியா கொண்டு வரும் நடவடிக்கைகளில் அவசரம் வேண்டாம் என்று சிபிஐக்கு, வெளியுறவு அமைச்சகம் கடிதம் எழுதியதாக சிபிஐ முன்னாள் அதிகாரி அண்மையில் குற்றம் சாட்டியுள்ளது குறித்து நிருபர்கள் கேட்டபோது, இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக துறைரீதியாக ஆய்வு நடத்தியதில் எந்த ஆவணமும் கிடைக்கவில்லை என்றார்.

Add Comment