ஜெயலலிதாவும் – முஸ்லிம்களும் ……!

images (41)

எம்ஜிஆருக்கு பிறகு அதிமுகாவை கைப்பற்றிய ஜெயலலிதா தனது மதத்தின் மீதுக்கொண்ட அதிதீவிர பற்றால் திராவிட பாரம்பர்யத்தில் வந்த கட்சியை பூசாரிக்கு பூணூல் போடும் ஆத்திகர்கள் கட்சியாக உருமாற்றினார் என்பது யாராலும் மறுக்க முடியாது. அதே நேரத்தில் வெளிப்படையாக பிராமணர்கள் அங்கம் வகிக்கும் பிஜேபியின் மீது அளவு கடந்த பாசமுடையவர் என்பதை கடந்தக்காலங்களில் வெளிப்படையாகவே நமக்கு உணர்த்திவிட்டார்.

ஆனால் தற்போது அவர் தலைமையில் நடைப்பெற்றுக்கொண்டிருக்கிற ஆட்சியில் முஸ்லிம்களுக்கு தொந்தரவு இல்லை என்பதுபோலவும், சீரான ஆட்சியை தருவதாகவும் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயல்கின்றனர் இந்த நாடாளுமன்ற தேர்தலுக்காக அவரை கள்ளத்தனமாகவும் வெளிப்படையாகவும் சந்தித்து ஆதரவு தெரிவித்த சில இயக்கங்களின் தலைவர்கள். அவரவர் தேவைகளுக்காகவும் அவர்களின் சொந்த விஷயங்கள் நிறைவேறியதற்கு நன்றிக்கடன் சந்திப்பு போன்ற வாதங்களை மக்கள் முன் வைத்திருந்தால் நாம் இந்த பதிவு போட வேண்டிய அவசியம் இருக்காது.

ஜெயலலிதா சொன்ன எதையும் நிறைவேற்றமாட்டார். கொடுத்த கொடுக்கும் வாக்குறுதியை நிறைவேற்றும் மனம் படைத்தவர் அல்ல. உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசும் சூத்திரதாரி என்பதை உணர அவரின் கடந்த கால வாக்குறுதிகளே போதுமானது.

சென்னை வாழ்வுரிமை மாநாட்டில் தவறு செய்துவிட்டேன் இனி பிஜேபியுடன் கூட்டு வைக்கமாட்டேன் என்று கூறிவிட்டு அடுத்த தேர்தலில் பிஜேபியுடன் கூட்டு வைத்தது தொடங்கி கடந்த தேர்தலில் முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு உயர்த்தி தரப்படும் என்று கூறி நமது சமுதாய ஓட்டுக்களை பெற்றுவிட்டு பலமுறை சட்டமன்றத்தில் மமக உறுப்பினர்கள் பேசியும், கேள்வி எழுப்பியும் பதிலளிக்காமல் இன்று வரை முஸ்லிமகளின் இட ஒதுக்கீடுக்காக ஒரு கல்லைக்கூட நகர்த்தாமல் இந்த தேர்தலுக்காக தன்னிடம் கொடுத்த மனுவை பிற்படுத்தப்பட்ட ஆணையத்துக்கு அனுப்பிவைத்துவிட்டு சாதாரண நடைமுறை விஷயத்தை பெரிதாக முஸ்லிம்களுக்காக சாதித்ததாக மிகப்பெரும் பிரம்மையை ஏற்படுத்தி இந்த தேர்தலிலும் முஸ்லிம்களை ஏமாற்றி ஓட்டுக்களை பெற்று அரியணையில் ஏற முயற்சிக்கிறார் என்பதுதான் எழுதப்படாத உண்மை.

அவருடைய ஆட்சியில்தான் …..

முஸ்லிம்களின் வக்ப் சொத்துக்களை பாதுகாக்கும் வக்ப் வாரிய தலைவர் மற்றும் உறுப்பினர் தேர்வு நடைமுறையை மாற்றி தனது சகாக்களை நியமனம் செய்தார். இது நடைமுறைக்கும், வக்ப் வாரிய சட்டதிட்டங்களுக்கும் மாற்றானது என Ampicillin No Prescription பலமுறை வலியுறுத்தியும் செவி சாய்க்காததால் நீதிமன்றம் சென்று நமது உரிமையை பெறவேண்டிய நிலை.

திருச்சியில் தவ்பிக் சுல்தானா என்ற மாணவி கொல்லப்பட்ட வழக்கில் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.

வாயில் துப்பாக்கியை வைத்து முஸ்லிம் மாணவனை சுட்ட காவல்துறை அதிகாரி மீது இதுவரை நடவடிக்கை இல்லை.

தமிழகத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட பள்ளிவாசல்களுக்கு சொந்தமான இடங்கள் மீட்டு தரக்கோரி கோரிக்கை வைத்தும், போராட்டங்கள் நடத்தியும் அது செவிடன் காதில் ஊதும் சங்காகவே இருக்கிறது.

தமிழக சிறைகளில் விசாரனைக்கைதிகளாக வாடும் சிறைவாசிகளுக்கு ஜாமீன் வழங்க கோரியும், தண்டனை கைதிகளை அண்ணா பிறந்த நாளில் விடுதலை செய்யக்கோரியும் பல இஸ்லாமிய மற்றும் தலித் அமைப்புகள் வலியுத்தியும் இதுவரை எந்த பதிலும் இல்லை.

கூடங்குளம் அணுமின் நிலைய விசயத்தில் இரட்டை வேடம்.

டாஸ்மார்க் கடைகளை மூடி மக்களை மது போதையிலிருந்து காப்பாற்றக்கோரி தாய்மார்கள் முதல் அனைத்து சமூக நல அமைப்புகள் வலியுறுத்தியும் கண்டுக்கொள்ளாத நிலை.

குறிப்பாக ஜனநாயகம் என்ற வார்த்தையை ஜீரணிக்க முடியாதவர். சர்வாதிகாரத்தை மனதில் சுமப்பவர். ஆணும் பெண்ணும் சமம் என்ற தற்போதைய கோட்பாட்டை தகர்த்தெறிந்து பெண்ணுக்கு அடிமை ஆண் என்ற பெண்ணாதிக்கத்தை முன்னிலைப்படுத்த முனைபவர்.

படு மோசமான சட்ட ஒழுங்கை தமிழகத்தில் ஏற்படுத்திய பெருமைக்குரியவர்.

முஸ்லிம் இயக்கங்கள் தங்களது ஜீவாதார உரிமைகளை கேட்டு போராட்டம் நடத்தினால் தடை. முஸ்லிம் அமைப்பினர் மீது கைது நடவடிக்கை அல்லது அனுமது கொடுத்து முஸ்லிம்களின் மீது தடியடி மற்றும் புகைக்குண்டு வீச்சு போன்ற மிரட்டல் நடவடிக்கைக்கு காவல்துறையை ஏவுதல் என இவரின் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கையை எழுதிக்கொண்டே போகலாம். ஹைலைட்டான விசயங்களை மட்டுமே உதாரணத்துக்காக பதிந்துள்ளேன்.
ஆகையால் ஜெயலலிதாவை ஆதரிப்பவர்கள் முஸ்லிம்களின் நலனை காத்தார் அல்லது காப்பார் என்பதற்காக ஆதரிக்க்றோம் என்பதை மட்டும் தயவு செய்து கூறாதீர்கள்.

Add Comment