30 வயதைக் கடந்த ஒவ்வொருவரும் ?

மாரடைப்புக்கான நெஞ்சு வலி போன்ற அறிகுறி தெந்தவுடன் குறிப்பாக மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு உள்ளவர்கள் உடனடியாக டாக்டர் உதவியை நாட வேண்டும். கால தாமதம் உயிருக்கு ஆபத்து. மாரடைப்பு அறிகுறி தெந்த உடனே அதே இடத்தில் ஓய்வெடுத்து, உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்ல உதவி நாட வேண்டும். மாறாக பாதிக்கப்பட்டவர் வலியுடன் தானாக சைக்கிளை, இரு சக்கர வாகனத்தை, காரை ஓட்டிச் செல்வது மிகவும் ஆபத்து. மார்பு இறுக்கத்துக்காக டாக்டர் அறிவுரைப்படி முன்பே மாத்திரை சாப்பிடுபவராக இருந்தால் நாக்கின் அடியில் நைட்ரேட் மாத்திரை வைக்கலாம். இதனால் வலி குறைய வாய்ப்பு உள்ளது.

ஒரு சிலருக்கு மாரடைப்பு ஆரம்பிக்கும்போது தீவிரமாக இருக்கும். அதாவது பெய ரத்த நாளம் ஆரம்பத்திலேயே அடைபட்டு அதனால் பாதிக்கப்படும் இதயத் தசை கடினமாக இருக்குமானால் அல்லது அடைப்பு இரண்டு மூன்று இடங்களில் ஒரே நேரத்தில் ஏற்படுமானால் இதயம் திடீரென நின்றுவிடக்கூடும். எப்படி கால் பெட்ரோல் அடைபட்டால் என்ஜின் நின்று போகிறதோ அது போல. தீவிர மாரடைப்பு வந்தால் முதல் அறிகுறியே திடீர் மயக்கமாக இருக்கலாம்.

அச் சூழலில் அருகே உள்ளவர்கள் கூட்டம் போட்டு வேடிக்கை பார்க்காமல், அவரைச் சமமான தரையிலே படுக்க வைத்து இதயத் துடிப்பு, நாடித்துடிப்பு ஆகியவற்றைப் பசோதித்துவிட்டு, துடிப்பு இல்லை என்றால் மார்பின் இடதுபுறம் வேகமாகத் தட்டி, லேசாக அமுக்கிக் கொடுத்தால், சிறிது நேரம் வாய் மூலம் செயற்கை சுவாசம் செய்தால் இதயம் மீண்டும் இயங்கி உயிர் பிழைக்க வாய்ப்பு உண்டு. மாறாக முகத்தில் தண்ணீர் ஊற்றி, கூட்டம் சேர்ந்து கால தாமதம் செய்தால் உயிழப்பு ஏற்படுவது நிச்சயம். ஒவ்வொரு குடும்பத்திலும் இதுபோன்ற முதலுதவியை யாரேனும் தெந்து வைத்திருத்தல் நல்லது.

மாரடைப்பு வந்த முதல் ஒரு மணி நேரத்தில் கிடைக்கும் மருத்துவ சிகிச்சைதான் இதயத் தசை பழுதடையாமல் தடுக்கவும், அதன் பின் விளைவுகளையும், உயிழப்பைத் தடுக்கவும்உதவும். பல வருஷங்களுக்கு முன்பெல்லாம், மாரடைப்புக்கு குறைந்தது 3 மாத ஓய்வு தேவை என்ற நிலை இருந்தது. நவீன சிகிச்சை முறையினால் அந்த நிலை மாறி ஓரு வாரத்திலேயே குணப்படுத்தி மீண்டும் பழைய நிலைக்கே கொண்டு வர முடிகிறது.

மாரடைப்பு வந்தவர்கள் விரைவில் குணமடைவதற்கான வாய்ப்பு, அது எத்தனை ரத்த நாளங்களைப் பாதித்துள்ளது என்பதைப் பொருத்தது. ஒன்று அல்லது இரண்டு ரத்தக் குழாய்களில் மட்டும் அடைப்பு இருந்தால் ஒரு வாரத்திலேயே குணமடைந்து வீடு திரும்ப முடியும். இரண்டு அல்லது மூன்று ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு இதயத் தசை அதிகம் பழுதடைந்திருக்குமானால் குறைந்தது 2 வாரம் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ள நேடலாம். மாரடைப்பு வந்த எல்லா நோயாளிகளுக்கும் மிகவும் முக்கியமானது நல்ல ஓய்வு.

சுலபமாக ஜீரணிக்கக்கூடிய ஆகாரங்கள், சுத்தமான பிராணவாயு நிறைந்த காற்று, மன உளைச்சலைக் குறைக்கக் கூடிய மருந்துகள், ரத்த நாளத்தை விவாக்கும் மருந்துகள், ரத்தக் குழாயில் அடைப்பைக் கரைக்கிற அல்லது ரத்தம் குழையும் தன்மையைக் குறைக்கிற மருந்துகள், இதயத் துடிப்பைச் சீர்படுத்தும் மருந்துகள், மானிட்டர் ஈசிஜி மூலம் கண்காணித்துக் கொடுக்கப்படும்.

ரத்த அழுத்தம், மாரடைப்புக்கான அறிகுறிகள், இதயத் தசையில் பாதிப்பு ஆகியவற்றை ஈசிஜி, எக்கோ ஸ்கேன் மூலம் கண்காணித்த பின் தீவிர சிகிச்சைப் பிவில் இருந்து மற்ற பிவுக்கு மாற்றப்படுவார்கள். வீடு செல்லும்போது உணவு உண்ணும் முறைகள், வீட்டிலே செய்யக் கூடிய உடற்பயிற்சி முறைகள், உட்கொள்ளும் மருந்துகள் முதலியவை பற்றி அறிவுரை கூறப்படும். எந்தெந்த ரத்தக் குழாய்களில் அடைப்பு உள்ளது, ஒரே ரத்தக்குழாயில் ஓடத்தில் சிகிச்சை மூலம் அடைப்பை நீக்க இயலுமா, பைபாஸ் அறுவைசிகிச்சைதான் செய்ய வேண்டுமா என்பதைத் தெந்துகொள்ள ஆஞ்சியோகிராம் சோதனை மிகவும் அவசியம்.

ஒன்று அல்லது இரண்டு ரத்தக் குழாய்களில் ஒரு குறுகிய இடத்தில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு வந்திருந்தால் அவர்களுக்கு பலூன் சிகிச்சை சிறந்தது. மூன்று ரத்தக் குழாய்களில் அடைப்பு அதிகம் இருந்தாலோ, பெய ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு பலூன் சிகிச்சைக்கு ஏற்றதாக இல்லாத ரத்த நாள அமைப்புள்ள நோயாளிக்கு பைபாஸ் அறுவைசிகிச்சையே சிறந்தது.

பலூன் சிகிச்சை, பைபாஸ் அறுவைச்சிகிச்சைக்குப் பின்னும், கவனக்குறைவால் மாரடைப்பு திரும்ப வருவதற்கான காரணங்கள் தொடருமானால் மீண்டும் மாரடைப்பு வர வாய்ப்பு உண்டு. எனவே மாரடைப்பு வருவதற்கான காரணங்களைத் தெந்துகொண்டு அதைத் தவிர்ப்பது மிகவும் நல்லது.

புகை பிடித்தல், உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் கொழுப்பு அதிகமாகச் சேருதல், மன உளைச்சல், சர்க்கரை நோய், உடல் பருமன், குணாதிசயம், உட்கார்ந்த இடத்திலேயே வேலை செய்தல் முதலியவை மாரடைப்பு வருவதற்கு முக்கியக்காரணங்கள். வயது அதிகமாக அதிகமாக மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலருக்கு மாரடைப்பு கடந்த காலத்திலேயே வந்திருக்குமானால் அந்த சந்ததியினரைச் சேர்ந்த மற்றவர்களுக்கும் வர வாய்ப்பு அதிகம் உண்டு. அவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

30 வயதைக் கடந்த ஒவ்வொருவரும் ஆண்டுதோறும் மருத்துவப் பசோதனை செய்து கொள்ள வேண்டும். ரத்த அழுத்தம், ஈசிஜி, எக்கோ, ரத்தத்தில் சர்க்கரை, buy Doxycycline online கொழுப்பின் அளவு ஆகியவற்றைக் கண்காணித்துக் கொள்ள வேண்டும். புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் கண்டிப்பாக புகையை நிறுத்தி விட வேண்டும்.

Add Comment