மலேசிய விமானம் மாயம் 8 நாட்களுக்கு பிறகு மர்மம் முடிவுக்கு வந்தது கடத்தபட்டது தான் உண்மை

கோலாலம்பூரில்  இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்குக்கு 239 பயணிகளுடன் புறபட்டு சென்ற மலேசிய விமானம் நடுவானில் திடீரென மாயமானது. இச்சம்பவம் நடந்து இன்றுடன் 8 நாட்கள் ஆகிறது. மாயமான விமானத்தை தேடும் பணியில் அமெரிக்கா, இந்தியா, சீனா, வியட்நாம் உள்பட 12 நாடுகளை சேர்ந்த 42 கப்பல்கள், 39 விமானங்கள் ஈடுபட்டுள்ளன.ஆனால்  எந்த வித தகவலும் இதுவரை தெரியவில்லை.

இருந்தும் அது குறித்த தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. அந்த விமானம் விபத்தில் சிக்கியதா? தீவிரவாதிகளால் கடத்தப் பட்டதா? அல்லது நாசவேலையால் சிதைக்கப்பட்டதா என பல்வேறு கேள்விகள் எழுந்து உள்ளது.

போலி பாஸ்போர்ட்டில் தீவிரவாதிகள்

மலேசிய விமானத்தில் 4 பேர் போலி பாஸ்போர்ட்டில் பயணம் செய்திருப்பதாக முதலில் தகவல்கள் வெளியாகின. அவர்களில் 2 பேர் மட்டுமே சந்தேகத்துக்கு உரியவர்கள் என்று மலேசிய போலீஸார்  தெரிவித்தனர்.

இதுகுறித்து மலேசிய காவல் துறை தலைவர் காலித் அபுபக்கர் நிருபர்களிடம் கூறியதாவது:- , 2 பேர் போலி பாஸ்போர்ட்டில் பயணம் செய்துள்ளனர். எனகூறினார்

.அவர்கள் பூர்யா மெர்டேட்  முகமது நூர், 19, மற்றும் தெலவார் சையத் முகமது ரேசா, 29,ஈரான் நாட்டை சேர்ந்தவர்கள். தற்போது இவர்கள் மீதான சந்தேகமும் நீங்கி உள்ளது.

சீனா

விமானத்தில் பயணித்தவர்களில் பெரும்பாலான வர்கள் சீனர்கள் என்பதால் மாயமான  விமானத்தை கண்டுபிடிப்பதில் சீனா முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. விமானம் புறப்பட்ட நாளில் இருந்து அதற்கு முன்னும் பின்னும் தனது செயற்கை கோள்கள் எடுத்த அனைத்து புகைப்படங்களையும் எடுத்துப் பார்த்தது. ஆனால் விமானம் பற்றி எந்த தக வலும் கிடைக்கவில்லை.

மலேசிய விமானம் காணாமல்போன வியட்நாம் தெற்கு கடலோர பகுதியில் விமானத்தின் சிதைந்து போன பாகங்கள் போன்று தோற்றமளிக்கும் 3 பொருட்கள் கடலில் மிதப்பதாக சீன செயற்கை கோள் கண்டு பிடித்ததாக தெரிவிக்கப்பட்டது.  இந்த தகவலை சீன ராணுவத்தின் அறிவியல், தொழில்நுட்ப நிர்வாகம் அறிவித்தது.

ஆனால் இதை வியட்நாம் மறுத்து விட்டது. இத்தகவல் கிடைத்தவுடன் தனது 2 கப்பல்கள் மற்றும் 2 விமானங்களை உடனடியாக அனுப்பி நேரடியாகவும் விமானத்தின் சிதைந்த பாகங்கள் கடலில் மிதக்க வில்லை என்றும் உறுதியாக தெரிவித்தது. கடைசியில் அது விமானம் இல்லை என்று தெரியவந்தது.

மலேசிய விமானம் மாயமானது குறித்து சீன பிரதமர் லீ கெஹியாங் நிருபர்களிடம் கூறியதாவது:-

மாயமான விமானம் குறித்த தகவலுக்காக மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கிறோம். அந்த விமானத்தை கண்டுபிடிக்கும் வரை ஓயமாட்டோம். எக்காரணத்தைக் கொண்டும் தேடுதல் பணியை கைவிடவே மாட்டோம். இந்தச் சம்பவத்தால் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்லும் சீனப் பயணிகளுக்கு கட்டுப்பாடு எதுவும் விதிக்கப்படாது என்று அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, மாயமான விமானம் திசைமாறி மலாக் கலா ஜலசக்தி பகுதியில் பறந்ததாக தகவல் வெளி யானது. எனவே இப்பகுதியில் கடலில் விழுந்து மலாக்கா ஜலசக்தி வழியாக இந்திய பெருங்கடல் பகுதிக்கு சென்ற இருக்கலாம் என அமெரிக்கா கருதுகிறது.
அமெரிக்கா கூடுதலாக பி-8 போசிடன் கண்காணிப்பு விமானம் மற்றும் பி-3 ஓரியன் விமானங்களை தேடுதல் பணியில் ஈடுபடுத் தியுள்ளது.

இந்தியா உதவி

மலேசியா கேட்டுக் கொண்டதை தொடர்ந்து இந்தியாவும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளது. 5 போர்க்கப்பல்கள் மற்றும் 5 விமானங்கள் இப்பணியில் இறங்கியுள்ளன.
எனவே, அமெரிக்கா தனது ஏவுகனை அழிப்பு போர்க் கப்பலை இந்திய பெருங்கடலுக்கு அனுப்பி யுள்ளது. அக்கப்பல் தாய் லாந்து வளைகுடா பகுதியல் தேடுதல் வேட்டையை நடத்துகிறது.

அந்தமான் தெற்கே இந்திய கடற்படை மற்றும் கடலோரக் காவல் படையைச் சேர்ந்த 3 போர்க் கப்பல்களும் அந்தமான் கடலில் சுமார் 35,000 சதுர கி.மீட்டர் தொலைவுக்கு விமானத்தைத் தேடி வருகின்றன. இவை தவிர தாய்லாந்து கடலில் முகாமிட்டுள்ள இந்தியாவின் சாகர் போர்க்கப்பலும் விரைவில் தேடுதல் பணியில் இணைய உள்ளது. மேலும் இந்தியாவின் உளவு செயற்கைக்கோளான ருக்மணி மூலமும் விமானத்தை தேடும் பணி தொடங்கியுள்ளது.இந்தியா வங்கக் கடல் பகுதியில் 9,000 சதுர கி.மீ. தூரத்துக் கும் அதிக மான கடல் பரப்பில் கப்பல் கள் மூலம்  விமானத்தை தேடும் பணியில் ஈடுபட் டுள்ளது.இதில்   சென்னை கடலோரத்தில் 500 கி.மீ. தூரம் வரை உள்ள பகுதி களும் அடங்கும் என்பதால் சென்னை கடல் பகுதியிலும் மலேசிய விமானம் மூழ்கி கிடக்கிறதா என்று தேடும் பணி நடக்கிறது.

அதிநவீன பி-8ஐ என்ற கண்காணிப்பு விமானம், 3 ஹெலிகாப்டர்கள் மற்றும் போர்க்கப்பல்களுடன் பிரமாண்டமான தேடுதல் பணியில்  மலேசியாவும், இந்தியாவும்  கூட்டாக ஈடு பட்டுள்ளன.

இந்தியாவில்  உள்ள ரேடார் நிலையங்களில் பதிவாகி உள்ள தகவல்கள் விவரங்களையும் மலேசியா அரசு கேட்டுள்ளது.

மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் அமெரிக்காவின் பாதுகாப்பு நிறுவனமான பென்டகனும்  ஈடுபட்டு உள்ளது.இதற்கிடையே அமெரிக் காவின் கடற்படையைச் சேர்ந்த கப்பல், விமானம் விழுந்துள்ளதாக சந்தேகிக் கப்படும் மலாக்கா ஜலசந்தி நோக்கி பறப்பட்டு சென்றுள்ளது.

விமானம் ஆழ்கடலில் மூழ்கி இருக்கிறதா? என்பதை கண்டுபிடிக்க அமெரிக்கா வின் நாசா விண்வெளி ஆய்வு மையமும் உதவிக்கு வருகிறது.

நடுவானில் பறந்த விமா னம் ஒன்று  வெடித்து சிதறி இருக்க வேண்டும். இல்லையெனில் கடலுக்குள்  விழுந்து மூழ்கி இருக்க வேண் டும். வெடித்து சிதறினால் விமானத்தின் பாகங்கள் ஏதாவது ஒன்று கடலில் மிதக்க வாய்ப்பு உண்டு. எண்ணை படலம் காணப் படும்.

 Lasix No Prescription alt=”” src=”http://kadayanallur.org/wp-content/uploads/2014/03/malaysiyan-Pilots.jpg” width=”447″ height=”300″ />தலைமை விமானி வீட்டில் சோதனை

ரேடார் தொடர்பை இழப்பதற்கு முன்பாக அந்த விமானம், மலாய் தீபகற்பத்துக்கும், இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவுக்கும் இடையே சுமார் 805 கி.மீ. நீளத்தில் அமைந்துள்ள மலாக்கா ஜலசந்திக்கு மேலே சென்றதாக தகவல் வெளியாகியது. இந்த தகவல் இன்று மறுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் சிவில் விமானப் போக்குவரத்து துறை, விமான தேடல் குழு, மீட்பு குழு ஆராய்ந்து வருகிறது.

இதனை தொடர்ந்து அந்தமான் கடல் பகுதி வரையில் விமானத்தை தேடும் பணி விஸ்தரிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே வரலாறு காணாதவகையில் விமானத்தை கண்டுபிடிக்கும் பணியில் 10 செயற்கைக்கோள்களை சீனா தேடும் பணியில் தீவிரபடுத்தப்பட்டது.

சீன அரசு இணையதளம் ஒன்று காணாமல் போன மலேசிய விமானத்தின் சேதமடைந்த பாகங்கள் தென்படும் செயற்கைக்கோள் படங்களை வெளியிட்டுள்ளதாக சீனாவின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான சின்ஹூவா தெரிவித்துள்ளது.

விமானத்தை ஓட்டி சென்ற தலைமை பைலட் ஜாகாரி  அகமது ஷா வீட்டில் மலேசிய போலீசார் இன்று சோதனையில் ஈடுபட்டனர்.மலேசிய போலீசார் தலைமை பைலட்டின் குட்ம்பத்தினரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  அகமது ஷா  மன நிலை எவ்வாறு இருந்து என்பது குறித்தும் விசாரணை நடத்தினர். இது ஒரு வாடிக்கையான விசாரணைதான் அவரை குற்றவாளியாக கருதி விசாரணை நடத்த வில்லை என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடலுக்குள் விமானம்

உலக நாடுகள் விண் ணில் செலுத்திய ஏராள மான செயற்கை கோள்கள் பூமியை சுற்றி வந்து கண் காணிக்கின்றன. தரையில் செல்லும் ஒரு சிறிய காரின் நம்பர் பிளேட்டை கூட துல்லியமாக கண்டுபிடித்து சொல்லும் உளவு ராக்கெட்டு களும் கூட இருக்கின்றன.
ஆனால் இவற்றின் கண் ணில் எல்லாம் விமானம் சிக்கவில்லை.  விமானம் வெடித்து  இருந்தால் அதன் தீப்பிழம்பு ஏதாவது ஒரு செயற்கைகோளின் கேமராவில் பதிவாகி இருக் கும். மலைகள், காடுகளில் விமானம் விழுந்து நொறுங்கி கிடந்தாலும்  இதற்குள் கண்டுபிடிக்கப்பட்டு விடும். அந்த அளவுக்கு செயற்கை கோள்கள் உள்ளன.

எனவே விமானம் கடலுக்குள்தான் பாய்ந்து இருக்க வேண்டும் என்று விமான  தொழில்நுட்ப வல்லுனர்கள் கருதுகிறார்கள்.  இதை தொடரந்து இந்திய பெருங்கடலுக்குள் விமானத்தை தேடும் பணியும் நடைபெற்று வருகிறது.

விமானம் கடத்தபட்டதா?

இந்த நிலையில், மாயமான விமானம் கடத்தப்பட்டிருப்பதற்கான வாய்புகள் அதிகம் உள்ளன என்று  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டுள்ளதை புலனாய்வாளர்கள் உறுதி செய்துள்ளதாக மலேசிய அரசு அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

மாயமான விமானத்தில் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரி கூறுகையில், விமானம் கடத்தப்படுவதற்கான சாத்திய கூறுகள் அதிகம் உள்ளது. விமானம் கடத்தப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை; விமானம் எங்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்றும் தெரியவில்லை என்று தெரிவித்தார்.

சக விமானி கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டு பிறகு பயணம் செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பிரதமர் பேட்டி

இந்த நிலையில்  மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் குறித்து மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: –

மலேசியன் விமானத்தை தேடும் பணி ஒருவாரத்தை தாண்டி விட்டது. விமானத்தில் பயணம் செய்த குடும்பங்களுக்காக நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்.காணாமல் போன விமானத்தை தேடும் பணியில் 14 நாடுகள் ஈடுபட்டுள்ளன. மலேசிய விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்ட நாடுகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கி்றோம். விமானத்தை  தேடும் பணியில் 42 கப்பல்கள் 39 விமானங்கள் ஈடுபட்டுள்ளன.

தென் சீன கடல் பகுதியில் முதலில் தேடும் பணியில் ஈடுபட்டோம். அங்கு பலன் இல்லாததால்  தேடும் பணியை அந்தமான் கடல்பகுதிவரை விரிவுபடுத்தினோம்.  இதனிடையே,  விமானம் கடத்தப்ப்பட்டு உள்ளது தெளிவாகிறது.விமானத்தை செய்ற்கைகோள் மற்றும் ராடார் கருவிகள் மூலம் கண்காணித்த தகவல்களின் அடிப்படையில் கிடைத்திருக்கும் இந்தப் புதிய ஆதாரம், விமானத்தில் யாரோ ஒருவர் வேண்டுமென்றே இந்த கருவிகளை செயல் இழக்க செய்து இருப்பதை காட்டுகிறது.இத்தகவலை ஓரளவு நிச்சயமாகத் தன்னால் சொல்ல முடியும்.

மிகச் சமீபத்திய செய்கோள் படங்களை வைத்துப் பார்க்கையில், விமானம் கோலாலம்பூரிலிருந்து பீஜிங் செல்லும் வழியில் இரண்டு முறை திசை மாறியிருக்கிறது, முதலில் மேற்குப் புறமாகவும் பின்னர் வடமேற்காகவும் திரும்பி உள்ளது.

இதனை அடுத்து, இந்த விமானத்துக்கான தேடுதல் வேட்டையை,மலேசிய  அரசு தெற்கு சீனக் கடல் பகுதியில் நிறுத்துவதாகவும், இனி விமானத்தைத் தேடும் முயற்சி, வேறு இரண்டு பகுதிகளில் தொடரும்.ஒன்று, கஜக்ஸ்தான் -துருக்மேனிஸ்தான் எல்லையில் தொடங்கி, வட தாய்லாந்து வரையிலான பகுதி; இரண்டாவது, இந்தோனேசியாவில் தொடங்கி இந்தியப் பெருங்கடலின் தென்பகுதி வரையிலானது.

விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்று கூறபட்டாலும் , மலேசிய அதிகாரிகள் அனைத்து சாத்தியக்கூறுகள் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நன்றி:தினத்தந்தி

Add Comment