தென் ஆப்ரிக்கா-ஆஸி., அணிகள் மோதல்

உலக கோப்பை பயிற்சி போட்டியில் இன்று தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன.
இந்திய துணைக்கண்டத்தில் துவங்கும் பத்தாவது உலக கோப்பை தொடருக்கான, பயிற்சி போட்டிகள் தற்போது நடந்து வருகின்றன. இன்று நடக்கும் போட்டியில் பாண்டிங்கின் ஆஸ்திரேலிய அணி, ஸ்மித்தின் தென் ஆப்ரிக்க அணியை எதிர்கொள்கிறது.
இந்தியாவுக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியடைந்த அதிர்ச்சியில் இருக்கும் ஆஸ்திரேலிய அணி, உலக கோப்பை தொடருக்கு முன் எப்படியும் ஒரு வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என்று உறுதியாக உள்ளது. “நடப்பு சாம்பியனாக’ களமிறங்கும் இந்த அணிக்கு வாட்சன், பாண்டிங், பெய்னே தவிர, மற்ற வீரர்கள் buy Bactrim online பேட்டிங்கில் தங்களை நிரூபிக்க வேண்டும். பவுலிங்கில் பிரட் லீ எழுச்சி, ஹாஸ்டிங்ஸ், டேவிட் ஹசி ஆகியோர் மீண்டும் அசத்தும் பட்சத்தில் வெற்றிக்கு முயற்சிக்கலாம்.
தென் ஆப்ரிக்க அணி தனது முதல் பயிற்சி போட்டியில் ஜிம்பாப்வேயை சாய்த்த உற்சாகத்தில் களமிறங்குகிறது. இந்த அணியின் ஆம்லா, காலிஸ், ஸ்மித் உள்ளிட்ட “டாப் ஆர்டர்’ வீரர்கள் அசத்தலான பார்மில் உள்ளது, ஆஸ்திரேலியாவுக்கு சிக்கல் தான். தவிர, பவுலிங்கில் மார்கல், ஸ்டைன் போன்ற உலகத் தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். போத்தா, இம்ரான் தாகிர் உள்ளிட்ட சுழற் பந்து வீச்சாளர்கள் அசத்தும் பட்சத்தில், தென் ஆப்ரிக்க அணி இரண்டாவது வெற்றியை பதிவு செய்யலாம்.
மீண்டும் மோதல்:
இலங்கையின் கொழும்புவில் நடக்கும் மற்றொரு பயிற்சி போட்டியில் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் தங்கள் முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. தவிர, சமீபத்தில் முடிந்த வெஸ்ட் இண்டீசிற்கு எதிரான ஒருநாள் தொடரை இலங்கை வென்றது. இதற்கு பழி தீர்க்க, இந்த போட்டியை வெஸ்ட் இண்டீஸ் பயன்படுத்திக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று நடக்கும் பிற போட்டிகளில் வங்கதேசம்-பாகிஸ்தான் (மிர்புர்), கென்யா-நெதர்லாந்து (கொழும்பு), அயர்லாந்து-ஜிம்பாப்வே (நாக்பூர்) போன்ற அணிகள் மோதுகின்றன.

Add Comment