சாவ்லாவுக்கு தோனி பாராட்டு

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பவுலிங்கில் பியுஸ் சாவ்லா சிறப்பாக செயல்பட்டார். அதேபோல பேட்டிங்கிலும் சற்று உதவினால் நல்லது,” என, இந்திய அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.
இந்திய துணைக்கண்டத்தில் பத்தாவது <உலக கோப்பை கிரிக்கெட் தொடர், பிப். 19ல் துவங்குகிறது. இதற்கான முதல் பயிற்சி போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை 38 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதுகுறித்து கேப்டன் தோனி கூறியது:
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் பயிற்சி போட்டியில் சிறப்பான துவக்கம் கிடைத்தது. “மிடில் ஆர்டரில்’ தான் வீரர்கள் ரன்சேர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும். பவுலிங்கில் ஸ்ரீசாந்த் நன்கு செயல்பட்டார். பெங்களூரு ஆடுகளம் பேட்டிங்கிற்கு கடினமானது. முதலில் வேகப்பந்து வீச்சாளர்கள் பவுலிங் செய்த போது நன்றாக இருந்தது. அடுத்து சுழல் பந்து வீச்சாளர்கள் வந்தவுடன், பந்து அதிகளவு திரும்பியது.
சபாஷ் சாவ்லா:
ஆஸ்திரேலியாவுக்கு Viagra No Prescription எதிரான பயிற்சி போட்டியில், பியுஸ் சாவ்லா 4 விக்கெட் வீழ்த்தியது வரவேற்கத்தக்கது. ஆனால் இவர் பேட்டிங்கிலும் சற்று சிறப்பாக செயல்பட வேண்டும். குறைந்தது 15 முதல் 20 ரன்கள் வரை எடுத்தால் அது அணிக்கு நல்லதாக இருக்கும். அதேநேரம், “ஸ்பெஷலிஸ்ட்’ சுழற்பந்து வீச்சாளர் என்ற வகையில் சாவ்லா, தன் பங்கை சிறப்பாக செய்தார்.
இப்படி ஒவ்வொருவரும் தங்கள் திறமையை நன்கு வெளிப்படுத்துவதால், உலக கோப்பை போட்டியில் பங்கேற்கும் 11 வீரர்களாக, யாரை தேர்வு செய்வது, யாரை உட்கார வைப்பது என்பதில் சிறிய தலைவலி ஏற்பட்டுள்ளது. ஆனால் இது அணிக்கு நல்ல செய்தி தான்.
நாளை நடக்கும் நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி போட்டியில் சச்சின் கட்டாயம் பங்கேற்பார். ஜாகிர் கானை பொறுத்தவரையில் 100 சதவீதம் சரியானால் தான் போட்டியில் விளையாடுவார். இல்லையெனில், உலக கோப்பை தொடரின் முதல் போட்டியில் பங்கேற்பார்.
இவ்வாறு தோனி கூறினார்.

Add Comment